எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, September 28, 2013

என்னத்தைக் குழம்பு வைச்சீங்க?

இப்போ இந்த வெறும் குழம்பிலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமான ஒண்ணைப் பார்ப்போம். ஹிஹிஹி, இந்தக் குழம்புக்கு எங்க வீட்டிலே, அம்மா ஃபேவரிட்னு பேரு வைச்சிருக்காங்க.  என் மாமியாரெல்லாம் இப்படிப் பண்ணினதில்லை.  அவங்களுக்கு இப்படி எல்லாம் குழம்பைச் சித்திரவதை பண்ணலாம்னு தெரியாது போல. என்றாலும் இந்தக் குழம்பு அடைக்குத் தொட்டுக்க, உப்புமா(அரிசி உப்புமா), பொங்கல் ஆகியவற்றுக்கு எடுத்தது. நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

நல்ல நாட்டு முருங்கைக்காய்  ஒன்று, குழம்புத் தானுக்கு ஏற்றாற்போல் நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி நடுத்தரமானது 2

சின்ன வெங்காயம் நூறு கிராம்.  சின்ன வெங்காயம் கிடைக்கலைனா பெரிய வெங்காயம் ஒண்ணை நறுக்கிக்கவும்.

கத்தரிக்காய் 2   நறுக்கிக்கவும்.  முருங்கைக்காய் நீளமாய் நறுக்கினால் கத்தரிக்காயும் நீளமாய் நறுக்கணும். தக்காளி மற்றும்  பெரிய வெங்காயமும் நீளமாக நறுக்கணும்.

பச்சை மிளகாய் 2

மி.வத்தல் 2

கருகப்பிலை ஒரு கைப்பிடி

பெருங்காயம் ஒரு துண்டு

நல்லெண்ணெய் தாளிக்க, வதக்கப்போதுமான அளவு ஒரு சின்னக் கிண்ணம் அல்லது ஒரு குழிக்கரண்டி

உப்பு தேவைக்கு ஏற்ப

புளி ஒரு எலுமிச்சை அளவு, ஊற வைச்சுக் கரைத்துக் கொள்ளவும்.  கரைசல் மூன்று கிண்ணம் இருக்கலாம்.

குழம்புப் பொடி, முன் பதிவில் சொன்னாப் போல் தயார் செய்தது,  மூன்று டீஸ்பூன்.

கடுகு, ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன்.

கல்சட்டி/உருளி/கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், மி.வத்தல், பச்சைமிளகாய், பெருங்காயம், கருகப்பிலை என்ற வரிசையில் தாளிக்கவும்.  பின்னர் முதலில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், முருங்கைக்காய், கத்தரிக்காய் போட்டு ஒரு நிமிடம் வதக்கிப் பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றி குழம்புப் பொடி, உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.  சேர்ந்து கொதிக்கையில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கவும் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தோடு சாப்பிட, முன் சொன்னாப் போல் உப்புமா, பொங்கல், அடைக்கு ஏற்ற குழம்பு இது.  மோர் சாதத்துக்கும் ஜூப்பரோ ஜூப்பரு!


8 comments:

  1. ஜூப்பரோ ஜூப்பரு என்றால் செய்து பார்த்திட வேண்டியது தான்... நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, செய்து சாப்பிட்டும் பார்த்துட்டுச் சொல்லுங்க. :))))

      Delete
  2. கத்திரிக்காய் இல்லாம இதை செய்து பார்த்துட வேண்டியது தான்! :)

    ReplyDelete
    Replies
    1. கத்தரிக்காய் பிடிக்காதா உங்களுக்கு?? ஹிஹிஹி, என் ஃபேவரிட் கத்தரிக்காய் தான். :)))

      Delete
  3. செஞ்சுட்டுத்தான் மறு வேலை. பொங்கலுக்கு ஒரு மாறுதலான சைட் டிஷ் தேடிட்டிருந்தேன். ரொம்ப நன்றி அம்மா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, செய்து பாருங்க, எல்லாருக்கும் பிடிக்கும். :))))

      Delete
  4. இதில் சீரகம் சேர்த்துத் தாளித்தால் வித்தியாசமான வாசனையாக இருக்கும். கத்தரி, முருங்கை எப்பவுமே குட் காம்பினேஷன்!

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், இதிலே ஜீரகம் சேர்க்கிறதில்லை ஶ்ரீராம், அதாவது எங்க வீடுகளில்! :))))

      Delete