எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, March 24, 2011

நீங்க எனக்கு பிரண்டையா இல்லையா?

ஹிஹிஹி, சிநேகிதர்களைப் பிரண்டை எனக் கேலியாகச் சொல்லுவாங்க. அதுவும் எதனால் என்றால், அந்தக் காலங்களில் ஆங்கிலம் அதிகம் படிக்காத பாட்டிங்க இருந்தாங்க இல்லையா? அவங்க கிட்டே ஃபிரண்ட் என்று சொன்னால், அவங்க பிரண்டை என்றே சொல்லுவாங்க. என் அப்பாவோட சித்தியும் அப்படித் தான் சொல்லி இருக்காங்க. ஆனால் இங்கே சொல்லப் போறது பிரண்டை என்னும் வச்சிரவல்லி. ஹிஹி, என்ன ஒரு பெண்ணோட பேர் மாதிரி இருக்கா?? வச்சிரவல்லி என்றும் ஒரு பெயர் பிரண்டைக்கு உண்டு. இதோ இதான் காய். இங்கே மார்க்கெட்டில் கிடைக்குது. வீட்டிலேயே நட்டிருந்தோம். கொடி வகை. வேலை செய்யற ஆளுங்க எப்போ எப்படி வெட்டினாங்கனு புரியலை. சித்தரத்தையையும் காணோம், இதையும் காணோம். இரண்டையும் திரும்ப வச்சிருக்கோம், வரணும்! சரி, சரி, இதோ விஷயத்துக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

பிரண்டை வாங்கிக்குங்க. குறைஞ்சது நாலு பேர் உள்ள குடும்பத்துக்குக் கால் கிலோ வேண்டும். வாங்கி நல்லாக் கழுவி, கணுவினருகே வெட்டி எடுத்துவிட்டு மிச்சத்தைத் துண்டாக நறுக்கி வைச்சுக்கவும்.

மி.வத்தல் உங்கள் காரத்தின் தன்மைக்கேற்ப பத்து அல்லது பனிரண்டு வைச்சுக்கலாம். பெருங்காயம் ஒரு துண்டு, கடுகு, உ.பருப்பு முறையே இரண்டு டீஸ்பூன், புளி ஒரு நெல்லிக்காய் அளவு. உப்பு தேவையான அளவ. நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய், ஒரு டேபிள் ஸ்பூன்.


வாணலில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகு, உ.பருப்பு வறுத்துத் தனியாக வைக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில்போட்டுப் பொரித்துக்கொண்டு மிளகாய் வற்றலையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பிரண்டைகளைப் போட்டு நன்கு வதக்கவும். புளியையும் இதில் சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கிவிட்டுப் பின்னர் ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு உப்புச் சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் கொர கொரப்பாக இருக்கையிலேயே தனியாக எடுத்து வைத்த கடுகு,உ.பருப்பைச் சேர்க்கவும். ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் பின்னர் வெளியே எடுக்கவும். சூடான சாதத்தில், நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு பிரண்டைத் துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடவும். வயிற்றுக் கோளாறுகள், ருசியின்மை, பசியின்மை ஆகியனவற்றுக்கு அரு மருந்து. வயிறு உப்புசமாக இருந்தாலும் சரியாகும்.

இதன் கூடவே தொட்டுக்க சைட் டிஷாக மோர்க்குழம்பு அல்லது மோர்ச்சாறு பயன்படுத்தலாம். மோர்ச்சாறு சீக்கிரம் செய்ய முடியும். கெட்டியான புளித்த மோரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், அரிசி மாவு சேர்த்துக் கரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, வெந்தயம், மி.வத்தல், ஓமம், து,பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கரைத்த மோரை ஊற்றவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். இதை எந்தத் துவையல் அரைத்தாலும் சைட் டிஷாகப் பயன்படுத்தலாம். துவையல் என்பது முக்கியமான காய்கள், அல்லது பொருளை நன்கு வறுத்து மிளகாய் வற்றலோடு சேர்த்துச் செய்வது. சட்னி என்பது எல்லாவற்றையும் பச்சையாக வைத்துச் செய்வது. சட்னியில் தாளிதம் அரைக்க வேண்டாம். துவையலில் தாளிதத்தைச் சேர்த்து அரைக்க வேண்டும்.

9 comments:

 1. இங்கு நகரத்தில் கிடைப்பதில்லை.

  கிராமத்தில் தென்னம் தோட்டத்தில் இருக்கிறது.சட்னி, குழம்பு செய்வோம்.

  ReplyDelete
 2. குழம்பு தெரியாது மாதேவி, எப்படினு சொல்லலாமே! வரவுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 3. பிரண்டையை ஒரே ஒரு நாள் சாப்பிட்டே வழக்கமாகி விட்டது:)
  நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்தால் பலவித உபயோகம் இருக்கும் போலத்தெரிகிறதே.
  ஊரை விட்டு வந்தாட்டுப் படிக்கிறேன்.
  கிடைக்கிறதா பார்க்கிறேன்.:0

  ReplyDelete
 4. vaanga valli, some problem in tamil fonts. varavukku nanri. pirandai is cleaning our stomach. give a try. :)))))))))

  ReplyDelete
 5. பிரண்டை!! ம்... எனக்கு எப்பவுமே யாருக்கும் எங்காத்தில் தோனாதது தான் தோனும்.ஒரு problem / conflict ல நான் ஒண்ணு தோனி suggest பண்னினா எங்கம்மா நெட்டி முறித்து " என் தங்கமே!! பெத்தேனே ! பெத்த வயத்துல பிரண்டையைத்தான் கட்டிக்கணும் பா!! Most Of the time நான் சொன்னது suggest பண்னினதுதான் சரியானதா தான் இருக்கும். அந்த நிகழ்வுக்கப்புறம் ஆடி கழிச்சு கேப்பா எப்படிடி தோனித்து உனக்குனு ஆச்சர்ய படுவா!!ஆமா பிரண்டையை கட்டிண்டா என்ன பண்ணும் !!!!!! சாப்பிட்டா!! அப்பொ???

  ReplyDelete
 6. வாங்க ஜெயஸ்ரீ, பிரண்டைச் சாறு உடலில் பட்டால் அரிப்புப் பிடுங்கும். அப்பளத்துக்கு ஊற்றிப் பிசையறது உண்டு. எங்க மாமியார் கையாலே அப்பளமாவு பிசையும்போதே பிரண்டைச்சாறையும் ஊற்றிக் கையாலேயே கலக்கிட்டு அப்புறமா இடிம்பார். :)))) இரண்டு நாளைக்கு அரிப்பு இருக்கும். எங்க அம்மாவும் நீங்க சொல்றாப்போல் தான் என்னைச் சொல்லுவா. அப்புறமா எல்லாம் ஏன் அப்படிச் சொன்னோம்னு வருத்தப்பட்டா! :(

  சாப்பிடும்போதும், கொஞ்சம் நாக்கை அரிக்குமோனு சந்தேகம் தான். ஆனால் அவ்வளவா அரிக்கலை. கணுப்பகுதியை வெட்டி எடுத்துட்டா அரிக்காதுனு நினைக்கிறேன். வயிறு என்னமோ ரொம்பவே லேசா, அருமையா இருக்கு. வாரம் ஒருநாள் சாப்பிடணும்னு வச்சிருக்கோம். :D

  ReplyDelete
 7. அது சரி, ஜெயஸ்ரீ, நீங்க கேட்ட கர்நாடகா கொஜ்ஜு அடுத்தாப்போல் எழுதி இருக்கேனே, பார்க்கலையா? :D

  ReplyDelete
 8. பாத்துட்டு போன comment அப்பற்ம் எழுதிருக்கேனே பாக்கலியா! நம்ப ளோடது தான் எனக்கு வஸனையா இருக்கற மாதிரி!ஒருவேள அந்த style நன்னாதான் இருக்குமாயிருக்கும் நான் தான் கொலை பண்ணி இருப்பேன் கொஜ்ஜை!! ஒருபக்கம் புளி, ஒருபக்கம் ஏதோ ஒரு கசப்பு, இன்னோரு பக்கம் திதிச்சுண்டுநு தனி தனி யா வந்தது நான் பண்ணின குஜ்ஜு!!! .2 தடவை பல ரஹ கொ(ஜ்)லை பண்ணினா எனக்கு கொஜ்ஜுவா வரும் போல:))perhaps tinned pineapple?? :)))) அப்படி அது தலைல போட்டுடேன் இங்க!:))

  ReplyDelete
 9. நல்ல பதிவு ;சின்ன வயதில் சாப்பிட்ட நினைவு :)

  ReplyDelete