எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, March 17, 2011

சப்பாத்தி சாப்பிடலாமா?

தினம் தினம் என்ன பண்ணறது சப்பாத்திக்கு?? அதுவும் தினசரிச் சாப்பாட்டிலே சப்பாத்தியும் உண்டுங்கறச்சே/ பாலாஜி அங்கிள் சொன்னாப்போல் ஆவக்காய் ஊறுகாயும், வெண்டைக்காய்க் கறியும் நல்லாத் தான் இருக்கும். ஆனால் வெண்டைக்காயைச் சாதாரணமாய்ப் பண்ணறாப்போல் பண்ணாமல் கொஞ்சம் வித்தியாசமாப் பார்ப்போமா??

வெண்டைக்காய் உங்க தேவைக்கு ஏற்பக் கால் அல்லது அரை கிலோ. குடமிளகாய் நூறு கிராம், தக்காளி பெரிது என்றால் ஒன்று, சின்னது என்றால் இரண்டு. மி.பொடி, ஒரு டீஸ்பூன், தனியா பொடி, பெருங்காயப் பொடி ஒரு டீஸ்பூன், ம.பொடி, உப்பு, சீரகம், கடுகு தாளிக்க. அல்லது சாம்பார் பொடி இரண்டு டீ ஸ்பூன். எண்ணெய்.

வெண்டைக்காயை ரொம்பப் பொடியாக நறுக்காமல் ஒரு இஞ்ச் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதே அளவுக்குக் குடை மிளகாய், தக்காளியையும் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் வைச்சு, கடுகு, சீரகம் தாளிக்கவும். பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்க்கவும். வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டுச் சற்று வதக்கவும். குடைமிளகாய்த் துண்டங்களையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கலக்கும் வரை வதக்கிக் கொண்டு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் அல்லது சாம்பார் பொடியும் சேர்த்து, நறுக்கிய தக்காளித் துண்டங்களையும் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். மூடி வைக்க வேண்டாம். அப்படியே சற்று நேரம் நன்கு கலந்து கொண்டு வதக்கிக் கொள்ளவும். கறி நன்கு வதங்கியதும், சூடாகச் சப்பாத்தியுடன் பரிமாறவும். இதுக்கு வெங்காயமோ, பூண்டோ தேவை இல்லை.

14 comments:

 1. சாப்பிட்டா போவுது...!! அப்படியே நம்ம பக்கம் வந்துட்டு போலாமே..!www.thangampalani.blogspot.com

  ReplyDelete
 2. சூப்பர் ! உடனே செய்து பார்க்கிறேன்
  பதிவுக்கு நன்றி கீதாம்மா
  ஆமா ! வழக்கமான படங்களை விட அதிக கிளாரிட்டி யோடு
  காய்கறி படங்கள் அருமையா வந்து இருக்கே
  எப்படி சாத்தியம் ஆயிற்று ! தெரிந்து கொள்ள ஆசை ..

  ReplyDelete
 3. சப்பாத்தி நமது தென்னிந்திய உணவு இல்லை ;அது குளிர் பிரதேசத்துக்கு ஏற்ற உணவு ;
  அதனால் உடல் சூடு அடையும் என்ற மாற்று கருத்து குறித்து

  ReplyDelete
 4. வாங்க தங்கம் பழனி, முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. கட்டாயமாய் வரேன்.

  ReplyDelete
 5. வாங்க ப்ரியா, செய்து பாருங்க. வெண்டைக்காய் அநேகமாய்க் குழந்தைங்க எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவாங்க. படங்கள் நல்லா இருக்கே! ஹிஹிஹி, எனக்கே தெரியாது! தெரிஞ்சால் தானே சொல்றதுக்கு? எப்போவும் போல கூகிளாண்டவர் கொடுத்தது தான். :))))))

  ReplyDelete
 6. தென்னிந்திய உணவில்லைனு சொல்ல முடியாது. பொதுவாகக் குளிர் பிரதேசத்தில் வளரும். ஆனால் சூடுனு இல்லை. என்றாலும் ஒரு சிலர் சாப்பிடக் கூடாதுனு சொல்றாங்க. பலர் சாப்பிடலாம்னும் சொல்றாங்க. எங்களுக்கு வட இந்தியாவிலே அதிகம் வாசம் செய்ததாலே சப்பாத்தி பழக்கம் ஆகிவிட்டது. சாதம்,சப்பாத்தி இரண்டும் ஒரே கலோரிகள் தான். இரவுக்கு மட்டும் சப்பாத்தி. அதுவும் சுட்டு. சுட்டு என்றால் நிஜமாகவே அடுப்பில் சுட்டது. கொஞ்சம் போல் நெய் தடவுவேன்.

  ReplyDelete
 7. எனக்கு வெண்டைக்காயும் பிடிக்காது குடை மிளகாயும் பிடிக்காது

  ReplyDelete
 8. எல்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெண்டைக்காய் பிடிக்காதா? கு.மி. இங்கே மாமாவுக்கும் பிடிக்காது. வாங்கினால் நான் மட்டுமே சாப்பிடணும்! :( வாழைத்தண்டு, காரட், கு.மி. யோட பாசிப்பருப்பும் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்த சாலட் சாப்பிட்டுப் பாருங்க. சூப்பராய் இருக்கும்
  என்ன பிரச்னைனா எனக்கு வெண்டைக்காயும் சாப்பிடக் கூடாது. எலுமிச்சம்பழம், நாரத்தை போன்ற சிட்ரிக் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கும் தடா! :(((( அது எல்லாமுமே பிடிக்கும், ஆனால் சாப்பிடக் கூடாது! :((((

  ReplyDelete
 9. //பாலாஜி அங்கிள்//
  ஹி ஹி... ஐ லைக் திஸ்...:))))

  எனக்கு சப்பாத்தி சாப்பிட பிடிக்கும் செய்யத்தான் பிடிக்காது... நல்ல ரெசிபி....:)))

  ReplyDelete
 10. ம்.. வெண்டைங்கா...வா.. வேணாம்மா எனக்கு கொழ கொழா.....ஆமா கொடை மிளகான்னு பாத்தப்போ நியாபகம் வரது . பங்களூர் கொஜ்ஜு ப்பொடி எப்படி செய்யணும்????? அதான் நம்ப கொத்ஸு வா??

  ReplyDelete
 11. வெண்டைக்காயைப் பார்த்தாலே எல்லாரும் ஓடறீங்களே? :)))))

  ReplyDelete
 12. ஜெயஸ்ரீ, பங்களூர் கொஜ்ஜுப் பொடி எழுதறேன். ஆனால் அந்த கொஜ்ஜு அப்படி ஒண்ணும் நல்லா இல்லைனு சொல்லிக்கிறேன். எள், கொப்பரை இதெல்லாம் சேர்க்கிறாங்க. விபரமா எழுதறேன்.

  ReplyDelete
 13. தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரமிருக்கும்போது பார்க்கவும்

  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_21.html

  ReplyDelete
 14. ஓ, தாமதமாய் இப்போத் தான் பார்க்கிறேன் ராஜி, மிகவும் மன்னிக்கவும். அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  ReplyDelete