எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, September 12, 2010

அப்பாவி தங்கமணிக்காக வெடிக்காத உப்புச் சீடை!கோகுலாஷ்டமி சிறப்புப் பலகாரங்கள்/பட்சணங்கள்:

முறுக்கு: கை முறுக்கையே அநேகமாய் முறுக்கு என்று சொல்வோம். சிலர் அச்சில் பிழியும் தேன்குழலைச் சொன்னாலும் பொதுவாய் முறுக்கு என்றால் கையால் சுற்றுவதே! இதற்குத் தேவையான பொருட்கள்.

அரிசி மாவு: 2 கப், வறுத்த உளுத்தமாவு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணை, கலக்க நீர் தேவையான அளவு. பொரித்து எடுக்கச் சமையல் எண்ணெய்.
முறுக்குச் சுற்றும் வட்டமான தட்டு, அல்லது நீரில் நனைத்துப் பிழிந்த வெள்ளைத் துணி அல்லது தினசரி செய்தித் தாள்(இதில் அச்சுக்களின் ஈயம் கலக்குமோனு சந்தேகம் எனக்கு இருப்பதால் துணி அல்லது வட்டத்தட்டையே பயன்படுத்துவேன்.)

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அரிசிமாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயப்பொடியைச் சேர்க்கவும். உப்புத் தூளாக இருந்தால் பரவாயில்லை. கல் உப்புத் தான் பயன்படுத்துபவர்கள் தேவையான உப்பை நீரில் கலக்கி அடுப்பில் வைத்துக் கொஞ்சம் சூடு செய்துவிட்டு அந்த உப்புக் கரைசலை ஊற்றிக்கொள்ளலாம். பொதுவாகப் பழங்காலத்தில் உப்புக் கரைசலை ஊற்றியே செய்யப் பட்டது. இன்றைய நாட்களில் தூள் உப்புக் கிடைப்பதால் அப்படியே பயன்படுத்தப் படுகிறது.

மாவு மேற்சொன்ன பொருட்களோடு நன்கு கலந்ததும், சீரகத்தையும், வெண்ணெயையும் சேர்க்கவும். நீர் சேர்க்காமல் சற்று நேரம் வெண்ணெய் நன்கு கலக்கும்வரை மாவைப் பிசையவும். மாவில் வெண்ணெய் நன்கு கலந்ததும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெயைச் சுட வைக்கவும். எண்ணெய் நன்கு சூடு ஏறி அதில் இருந்து ஆவி வரும்போது நினைவாக அடுப்பைச் சிறிதாக எரியவிடவேண்டும். எண்ணெய் சூடு ஏறுவதற்குள்ளாக முறுக்குத் தட்டிலோ, துணியிலோ கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக் கொண்டு, பின்னர் கை கொண்ட மட்டும் மாவை எடுத்து முறுக்கிச் சுற்றிக்கொண்டே வரவேண்டும். இரண்டு சுற்று, நாலு சுற்று, ஐந்து சுற்று, ஏழு சுற்றுத்தான் பொதுவாகச் சுற்றுவார்கள் என்றாலும் இரண்டு சுற்றே போதுமானது. ஐந்து, ஏழு எல்லாம் கல்யாணங்கள் போன்ற பெரிய அளவில் செய்யப் படும் விசேஷங்களில் பயன்படும். சுற்றிய முறுக்கைப் பின்னல் கலையாமல் ஒரு தோசைத் திருப்பியால் எடுத்துக் காய்ந்த எண்ணெயில் போடவும். ஒரு சமயத்தில் நாலைந்து முறுக்குகள் வரை போடலாம். ஐந்து, ஏழு சுற்று முறுக்கென்றால் ஒரே முறுக்குத் தான் போடமுடியும். முறுக்கு நன்றாகச் சிவக்கும் வரை பொரிக்கவும். நன்கு சிவந்து எண்ணெயில் மேலே மிதந்து வரும். பொரியும்போது வரும் சப்தமும் அடங்கிவிடும். அப்போது முறுக்குகளை வெளியே எடுக்கவும். ஒரு தகர டப்பாவில் அல்லது நமுத்துப் போகாவண்ணம் வேறு ஏதானும் டப்பாக்களில் போட்டு வைக்கவும். ஒரு மாதம் வரையிலும் கெட்டுப் போகாது. கையால் உடைத்தால் முறுக்குச் சுற்றுக்களின் உள்ளே குழல் போல் ஓட்டை தெரியும். அப்படி இருந்தால் முறுக்கு நல்ல பதத்தில் வந்திருக்கிறது என்று பொருள்.

அடுத்து உப்புச் சீடை:

இதற்கும் தேவையான பொருட்கள்

2கப் அரிசிமாவு, ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்த உளுத்த மாவு, ஊற வைத்த கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது, விருப்பமிருந்தால் எள் ஒரு டீ ஸ்பூன் சேர்க்கலாம், உப்பு, பெருங்காயத் தூள், வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், நீர் தேவையான அளவு. பொரிக்க சமையல் எண்ணெய்.

அரிசி மாவு, உளுத்தமாவு, உப்பு, பெருங்காயத் தூள், எள், தேங்காய்க் கீறியது, ஊறிய கடலைப்பருப்பை ஒன்றாய்ச் சேர்க்கவும். சற்று நேரம் எல்லாம் ஒன்றாய்க்கலக்கும்வரை கலந்துவிட்டுப் பின் வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் நன்கு கலந்ததும், கொஞ்சமாய் நீரை விட்டுப் பிசையவும். இது உருட்டினால் உருண்டையகாவும், உதிர்த்தால் உதிராகவும் வரவேண்டும். அப்படிப் பிசைந்தால் போதுமானது. ரொம்ப நீரைச் சேர்த்துச் சப்பாத்தி மாவு போலெல்லாம் பிசையவேண்டாம். இப்போது அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கவும். அதற்குள் ஒரு பேப்பரில் அல்லது துணியில் பிசைந்த மாவைக் கையால் உருட்டிப் போடவும். உருண்டை ரொம்பவும் உருண்டையாக அழகாயெல்லாம் வரவேண்டாம். சும்மாப் பிடிச்சுப் போட்டால் போதுமானது. பொதுவாக உப்புச் சீடையை எண்ணெயில் போட்டால் வெடிக்கும்.

சமையலறையே ரணகளமாகக் காட்சி அளிக்கும். அதற்குக் காரணம் சேர்க்கும் உப்பு, கடலைப்பருப்பு, தேங்காய்க் கீறல் போன்றவற்றைச் சரியாகக்கவனிக்காமல் சேர்ப்பதே. உப்பை நீரில் கரைத்தே உப்புச் சீடைக்குச் சேர்க்கவேண்டும். அடுத்துக் கடலைப்பருப்பில் ஒரு தோல் கூட இருக்கவேண்டாம், கல் இருந்தாலும் வெடிக்கும். அதையும் கவனித்துச் சேர்க்கவேண்டும். தேங்காய்க் கீறலில் தேங்காயின் ஓடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இதையும் மீறிச் சீடை வெடித்தால் உருண்டையைச் சரியாகப்பிடிக்காமல் ரொம்பவே கையால் வழவழவென்று செய்ததால் இருக்கும். ஆகவே மேலே கொஞ்சம் கரடு, முரடாக இருந்தால் தப்பில்லை.

உருட்டிய சீடைகளை எண்ணெயில் போட்டுவிட்டு (நினைவாக அடுப்பில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கவும்) ஒரு மூடியால் அதை மூடிவிடவேண்டும். நூற்றுக்கு நூறு சதம் வெடிக்காது. பின்பு தட்டை எடுத்துவிட்டுச் சீடைகளைத் திருப்பிப் போடவும். நன்கு வெந்து சத்தம் அடங்கி மேலே மிதந்து வந்ததும், எடுத்து எண்ணெயை வடித்துவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும். சீடைகள் நன்கு வெந்திருந்தால் கலகலவென்ற சப்தம் வரும்,

வெல்லச் சீடை:

அரிசி மாவு இரண்டு கப், வறுத்த உளுத்த மாவு, ஒரு டேபிள் ஸ்பூன், எள் ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது ஒரு டேபிள் ஸ்பூன், ஏலக்காய் நாலைந்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். நல்ல பாகு வெல்லம் தூளாக்கியது இரண்டு கப், வெல்லம் பாகு வைக்க நீர் அரை கிண்ணம். தொட்டுக்கொள்ள நெய், பொரிக்க சமையல் எண்ணெய்/நெய்

கடாய் அல்லது வெங்கல உருளியில் அரைக் கிண்ணம் நீரை ஊற்றிக் கொதிக்கும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் கரைந்து பாகு கொதிக்கும் போது வேறொரு சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் நீர் எடுத்துக்கொண்டு காய்ந்த பாகில் ஒரு துளி விட்டுப்பார்த்தால் அது நீரில் கரையாமல் கையால் உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அந்தப் பதம் வந்ததும், தேங்காய்க் கீறல்களைச் சேர்த்துவிட்டு, பாகைக் கொஞ்சம் கொஞ்சமாய் அரிசி மாவில் விட்டுக் கலக்கவும். மாவு பாகில் நன்கு கலந்து விட்டது என்று நமக்கே புரியும், அந்த நேரம் வரைக்கும் பாகைச் சேர்க்கலாம். பாகு போதும் என்ற அளவு கலந்ததும், மாவில் வறுத்த உளுத்த மாவையும் எள்ளையும் ஏலக்காய் தூளையும் சேர்த்துக் கரண்டியால் நன்கு கலக்கவும். சற்று நேரம் ஆறவிடவும். பின்பு மாவை எடுத்துக் கையால் உருட்டிப் பார்க்கவும். உருண்டைகளாய் வரும்.

எண்ணெய் அல்லது நெய்யைக் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை ஒன்றிரண்டாய்ப் போட்டுச் சிறு தீயில் பொரிக்கவும். மேலே சிவந்து வரும் வரை பொரித்து எடுக்கவும். ஆறிய பின்பு சாப்பிட்டுப் பார்த்தால் உள்ளே மிருதுவாகவும், மேலே மொறுமொறுப்போடும் இருக்கும். பல நாட்கள் கெடாது. இரண்டு மாதம் கூட இருக்கும். பாகும் நன்றாக அமைந்து நெய்யிலும் பொரித்தால் மாதங்கள் ஆக, ஆக சுவை கூடும்.

62 comments:

 1. ஏடிஎம்முக்கு வெடிக்காதுன்னா அர்த்தம் என்ன? மத்தவங்களுக்கு வெடிக்குமா? :P:P:P

  ReplyDelete
 2. வாங்க திவா, உங்களை இங்கே பார்த்ததே ஆச்சரியம். ஏடிஎம்முக்கு வெடிக்காதுனு எங்கே சொல்லி இருக்கேன். வெடிக்காத முறையிலான உப்புச் சீடை செய்முறையை அவங்களுக்காகச் சொல்லி இருக்கேன்! :P:P:P

  ReplyDelete
 3. ரொம்ப நல்லா எழுதி இருக்கறிங்க கீதாம்மா ;
  உடல் நிலை தேவலை தானே .
  செய்முறை குறிப்புகளை குறித்து வைத்து கொண்டேன்.
  என் பசங்களுக்கு காலாண்டு பரிட்சை சமயமாதலால்
  ப்ளாக் பக்கம் அதிகமாக வர முடியவில்லை
  இனி படித்து பயன் பெற தொடர்ந்து வருவேனாக்கும் !

  ReplyDelete
 4. ஐயோ மாமி ப்ராமிஸ்... அன்னைக்கே buzz ல லிங்க் பாத்து உடனே குஷியா வந்து கமெண்ட் போட்டேனே... என்னதிது என்னோட கமெண்ட் எல்லாம் ஏன் இப்படி காணாம போகுது? போன வாரம் இப்படி தான் தக்குடு ப்ளோக்ல போட்டது காணோம்... யாரோ சதி பண்றாங்க மாமி... நான் போட்ட கமெண்ட் யோசிச்சு மறுபடியும் ரீ-டைப் பண்ணிட்டேன். கிட்டத்தட்ட இப்படி தான் போட்டேன்

  //ஆஹா... எனக்காக ரெசிபி... ரெம்ப சந்தோஷம் மாமி... நெஜமாவே வெரி ஹாப்பி... கண்டிப்பா செய்து பாக்குறேன்... நல்லா வந்தா உங்களுக்கும் அனுப்பறேன்... ஒகே ஒகே டென்ஷன் ஆகாதீங்க... ரெசிபி குடுத்த புண்ணியத்துக்கு அந்த தண்டனை இல்ல உங்களுக்கு... ஹா ஹா ஹா... மீண்டும் மீண்டும் நன்றி....அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்காச்சும் பகவானுக்கு நல்ல பட்சணம் செய்யணும்... நன்றி//

  ReplyDelete
 5. ஆமாம் கீதாம்மா !
  அடி எல்லாம் கொடுக்க மாட்டீங்க தானே !
  தங்கமணி பாவம்மா ;எல்லாம் உங்க கணேசரும் எங்க கண்ணனும் செய்யும் லீலைகள் !!
  ஓகே தானே
  சரி இப்போவாவது எங்க பின்னோட்டங்களுக்கு பதில் போடுங்க அம்மா !!

  ReplyDelete
 6. //தங்கமணி பாவம்மா ;எல்லாம் உங்க கணேசரும் எங்க கண்ணனும் செய்யும் லீலைகள்//

  Corret correct...thanks Priya

  ReplyDelete
 7. பாருங்க கீதாம்மா !
  தங்கமணி பீல் பண்ணற மாதிரி
  தெரியறது
  இருக்காதா பின்னே
  முதல் முதலா நீங்க அவங்களுக்காக
  ஒரு பதிவு எழுதி
  அவங்களும் ரசித்து கமெண்ட்ஸ் போடறாங்க
  அது வரலைன்னா வருத்தம் இருக்க தானே
  செய்யும்
  சரி பரவாய் இல்லை ;போனது போகட்டும்!
  தங்கமணி ;நீங்க ஒன்னு செய்யுங்க
  புறப்பட்டு நேர்ல வாங்கோ
  உங்க மாமிக்கு உங்களை நேர்ல பார்க்க வேணுமாம
  வரும் போது மறக்காம ரெண்டு பாக்கெட்
  கிருஷ்ணா பா கடையில மைசூர்பா வாங்கிட்டு வந்து
  மாமியையும் என்னையும் கூல் பண்ணுங்கோ !
  தங்கம் !நான் கேள்வி பட்டது நெஜமா !
  நீங்களே சூப்பர் ஆ மைசூர் பாகு செய்வீங்களாமே!

  பாக்கலாம் தங்கம் !
  இதுக்கும் மாமி பதில் போடலைன்னா
  இருக்கவே இருக்கு தங்கமணி ஸ்பெஷல் இட்லி !!
  ஹ ஹ

  ReplyDelete
 8. வாங்க ப்ரியா, குழந்தைகள் படிப்பு முக்கியம், அதைக் கவனிச்சுட்டு நேரம் இருக்கும்போது வருவதே போதும்.

  ReplyDelete
 9. ஏடிஎம், நிஜம்மாவே பஸ்ஸிலே உங்க கமெண்ட் எதுவும் வரலை!:(

  ReplyDelete
 10. ஏடிஎம், நிஜம்மாவே பஸ்ஸிலே உங்க கமெண்ட் எதுவும் வரலை!:(

  ReplyDelete
 11. ஹிஹி, ப்ரியா பதில் கொடுத்துட்டேன், அதனாலே நோ ஏடிஎம் ஸ்பெஷல் இட்லி, பயமுறுத்தாதீங்க! :P

  ReplyDelete
 12. ஹ ஹா
  வெற்றி வெற்றி
  ஏடிஎம் இட்லி செல்லும் இடம் எல்லாம் வெற்றி
  ஆனால பட்ட சீனியர் பதிவர் .,ஆன்மீக அறினர்
  திருமதி கீதாம்மா அவர்களே ஏடிஎம் ஸ்பெஷல் இட்லி
  பார்த்து பயபடுகிறார் என்றால் அதன் பெருமையை என்ன
  சொல்வது!! :) :)

  ReplyDelete
 13. hihihi, Nan oru asthma patient, ATMod idli sapitu appuram ethavathu ayiduthunna?? athan! :P

  ReplyDelete
 14. ஆஹா... முன் ஜாக்கிரதை தான் மாமி...ஹா ஹா ஹா

  ReplyDelete
 15. நானும் தான் கீதாம்மா ! ஏதோ இன்ஹெளர் புண்ணியத்தில கண்ட்ரோல் செய்து கொள்றேன் !

  மற்றபடி நம்ம தங்கமணி இட்லி வலி நிவாரணி என்பது உங்களுக்கு தெரியாதா !!

  அப்புறம் தங்கமணி முதல் முதலா ஒரு சமையல் குறிப்பு செய்து பதிவு போட்டு இருக்காங்க!
  நீங்க தான் இன்னும் வந்து பார்க்கலயாம்!!

  ReplyDelete
 16. "கே"சரிப் பதிவு தானே?? படிச்சேன், படிச்சேன், பதிவு தான் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈளம்னா கமெண்ட்ஸும் அதைவிட நீஈஈஈஈஈஈஈஈஈஈளமா இருந்தது, அதான் ஒண்ணும் சொல்லலை! அதோட அம்பிக்குப் பிடிச்ச கேசரிப் பதிவு போட்டதுக்குக் கோவிச்சுண்டேன்! :)))))))))))))

  ReplyDelete
 17. பாவம் ATM கீதாம்மா ! சின்ன பொண்ணு அறியாம செய்துட்டாங்கன்னு
  இந்த ஒரு தடவை நீங்க மன்னிசுருங்களேன்
  என்ன மன்னிப்பு தமிழில் பிடிக்காத வார்த்தையா !
  புவனா;உடனே வந்து உங்க மாமியை சமாதான படுத்துங்கோ !
  கீதாம்மா இதோ புவனா வந்து கிட்டே இருக்காங்க !

  ReplyDelete
 18. புவனா !
  உங்கள் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம் !!

  ReplyDelete
 19. //அதோட அம்பிக்குப் பிடிச்ச கேசரிப் பதிவு போட்டதுக்குக் கோவிச்சுண்டேன்//

  ஆஹா என்ன மாமி இது... அவருக்கு கேசரி பிடிக்கும்னு தெரியும்... அவரு எப்ப உங்களுக்கு எதிரி ஆனாருன்னு ஒண்ணும் புரியலையே... நான் சிலபஸ்ல ஏதோ மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கே... இல்ல அன்னைக்கி மட்டும் க்ளாஸ் போகலையோ... இதுக்கெல்லாம் இநத சின்ன பொண்ணு மேல கோவம் கொள்ளலாமா மாமி... அதுவும் நான் அப்பாவி வேற... ஒகே உங்களுக்கு என்ன விருப்பம்னு சொல்லுங்க அடுத்த போஸ்ட் அதே தான்...சரிதானே மாமி இப்போ... இன்னும் கோபம்னா உங்க எதிரிக்கு ஒரு ஈடு இட்லி பார்சல் அனுப்பிடறேன்... இப்ப சரியா மாமி...

  (ப்ரியா - மாமிய தாஜா பண்ணிட்டேன் ஒரு வழியா... நீங்களும் கொஞ்சம் சிபாரிசு சொல்லுங்க... )

  ReplyDelete
 20. அவரு எப்ப உங்களுக்கு எதிரி ஆனாருன்னு ஒண்ணும் புரியலையே//

  பாடத்தையே புரிஞ்சுக்காத ஏடிஎம், ஏடிஎம், ஏடிஎம், என்னத்தைச் சொல்லறது?? :)))))))))) அம்பிக்கும் எனக்கும் ஏழாம்பொருத்தம்னு வலை உலகே அறியுமே! என்ன போங்க! இப்படி ஒரு மாணவியா எனக்கு?? :P:P:P

  ReplyDelete
 21. அடடா...Basic க்ளாஸ் மிஸ் பண்ணிட்டு நேரா advance course ஜாயின் பண்ணிட்டேன் போல இருக்கே மாமி... கொஞ்சம் ஸ்தல வரலாறு சொன்னா நோட்ஸ் எடுத்துக்கறேன்... தேங்க்ஸ் மாமி என் அறிவு கண்ணை திறந்தததுக்கு... இந்த அற்ப மாணவியை மன்னித்து விடுங்கள் டீச்சர்

  ReplyDelete
 22. சரியாப் போச்சு ஏடிஎம், நீங்க நாலு வருஷம் இல்லை பின்னாடி போகணும்?? தேடிக் கண்டு பிடிங்க! :P :)))))))))))))

  ReplyDelete
 23. ஹரே ராம ஹரே கிருஷ்ணா
  அடடே ! இன்னுமா ரெண்டு பேரும் சமாதானம் ஆகலே!!!
  இதோ பாருங்க கீதாம்மா ;எங்களாலே எல்லாம் நாலு வருஷம் என்ன நாலு மாசம் கூட
  பின்னாடி போக முடியாது !!
  அதானே! அம்பிங்கறது யாரு ! எப்படி ,எதனாலே கருத்து மோதல்ன்னு
  சொன்ன தான் இதை பத்தி என்னாலையும் யோசிச்சு கமெண்ட்ஸ் போட முடியும்னு
  nanum panivanboda soli kilkiren ;naan solrathu sarithaane Bhuvana !

  ReplyDelete
 24. //ஆகையால் அம்பி, ச்யாம் போன்றவர்கள் அதிகம் சந்தோஷப்படவேண்டாம். எனக்குத் தொண்டர் படையில் இருந்து குண்டர் படை வரை இருக்கு. சீக்கிரம் வந்து உங்களை எல்லாம் ஒரு கை இல்லை இரண்டு கை பார்க்கிறேன். அது வரை enjoooooooooyyyyyyyy!
  Posted by கீதா சாம்பசிவம் at 12/17/2006 05:42:00 PM//
  புவனா ! நாலு வருஷம் பின்னாடி போய் ஒரு வழியா கொஞ்சம் கண்டு புடிச்சுட்டேன்
  இனி மேலயாவது நாம மாமிக்கு மனசு கோணாம ஜாக்கிரதையா நடந்துக்குணும் ஓகே வா
  மேடம் இல்லை மிஸ் உங்களுக்கும் ஓகே தானே
  புவனா ! ஒரு விஷயம் தெரியுமா! நம்ம தங்க தலைவி
  எண்ணங்கள் ப்லோக்ளில் 1050 பதிவுகள்
  போட்டு சாதனை படைத்தது இருக்காங்க !
  போய் வாழ்த்திட்டு வாங்க !!

  ReplyDelete
 25. ahaa... priya...good job... I will recommend you to start a detective agency...ha ha ha...just kidding...thanks for digging it mam... இவ்ளோ விஷயம் இருக்கா? சூப்பர்... நானும் போய் பாக்கறேன்...ஹா ஹா ஹா

  ReplyDelete
 26. //எண்ணங்கள் ப்லோக்ளில் 1050 பதிவுகள்
  போட்டு சாதனை படைத்தது இருக்காங்க !//

  Hats off... சான்சே இல்ல... நான் 75 பதிவுக்கே ஓவர் பந்தா பண்ணிட்டு இருக்கேன்... நீங்க சத்தமில்லாம சாதனை செய்யறீங்க போல இருக்கே மாமி... வாவ்...

  ReplyDelete
 27. தேங்க்ஸ் புவனா !
  உங்களுக்கு விசயம் தெரியாதா
  ஏற்கனவே எனக்கு துப்பறியும் புலின்னு குந்தவை
  அவங்க ப்ளோக்ல என்னை பெருமை படுத்தியதை
  இந்த இடத்தில சொல்லி கொள்ள விரும்ப வில்லைப்பா
  ஏன்னா எனக்கும் தற்பெருமை பிடிக்காதுப்பா !ஹி ஹீ

  ReplyDelete
 28. புவனா! நீங்க எதாவது சொல்லறதா இருந்தா
  இங்கே வந்து சொல்லுங்க ! இந்த ப்ளாக் மட்டும் தான்
  நாம கமெண்ட்ஸ் போட்ட உடனே பப்லீஸ் ஆகுது!
  அப்புறம் உங்க பேரு போட்டதாலே ஒரு 50 வர்ற வரைக்கும்
  பின்னூட்டம் போட்டு கிட்டு இருப்போமா !

  ஆமா ! நீங்க மாமியோட்ட தொண்டர் படையா !இல்லே
  குண்டர் படையா !! ஹ ஹா
  என்ன நானா ! கொ ப செ குழுவில ஒருவர்
  ஆமா கீதாம்மா ! நம்ம கொள்கை என்ன ! ஹி ஹீ

  ReplyDelete
 29. டீச்சர் ! புவனா classuggu இன்னைக்கும் வரலே !!

  ReplyDelete
 30. ஒரு நாலு நாள் லீவு எடுத்தா இப்படியா கொட்டம் அடிக்கிறது??? கப் சிப் காராவடை, காலணாவுக்கு ஓசி வடை, பேசாம உட்காருங்க ரெண்டு பேரும்! :)))))))))

  ReplyDelete
 31. Thank you Miss... (அப்பாடா, நல்ல வேளை... பெஞ்ச்ல ஏறி நிக்க சொல்லலை... நல்ல மிஸ்...)

  ReplyDelete
 32. டீச்சர் !புவனா வந்து ஹ ஹா ஹி ஹீ ன்னு சிரிக்கறதை
  நீங்க கேட்கவே மாட்டீங்களா!

  ரெண்டு நாளா புவனா பண்ணற குறும்பு தாங்க முடியலை டீச்சர் !

  ReplyDelete
 33. ha ha ha...good one Priya...

  (மாமி... பிரம்பு எடுக்கறதுக்குள்ள மீ எஸ்கேப்...)

  ReplyDelete
 34. ஏடிஎம், என்ன அடைப்புக்குறிக்குள்ளே சிரிக்க மறந்துட்டீங்க?? சரி, சரி, வேண்டாம், வேண்டாம், பிரகாஷ் ராஜ் சிரிப்புனு சொல்லுவீங்க. எனக்குப் பிடிக்காத வில்லன்! :)))))))))

  ReplyDelete
 35. ப்ரியா, இப்போ சரியா?? :))))))

  ReplyDelete
 36. ஹுஹும் ! போங்க டீச்சர் ! நீங்களும் பொய்யாட்டம் ஆடறீங்க!

  ReplyDelete
 37. எங்கே ரெண்டு பேரையும் காணலே! தீபாவளி பர்சேஸ் பண்ண போய்டீங்களா!

  தீபாவளிக்கு என்ன பட்சணம் பண்ண போறீங்க! எத்தனை நாள் கிளாஸ் லீவ் டீச்சர் !

  ReplyDelete
 38. @ கீதா மாமி - ஹா ஹா... பிரகாஷ்ராஜ் சிரிப்பு தான் மாமி... ஆனா இப்ப அவர் நெறைய படம் இல்ல.. .ஒரே வருத்தம்...

  @ ப்ரியா - தீவாளிக்கு லீவ் எல்லாம் இல்லயாம்... டெய்லி ஸ்பெஷல் க்ளாஸ் கூட இருக்காம் (உங்களுக்கு மட்டும்... ஹா ஹா)

  ReplyDelete
 39. @புவனா -டீச்சர் இன்னைக்கு கிளியரா சொல்லிட்டாங்க ! புவனா மட்டும் வந்தா போதும் !

  ஏதோ இட்லி ,கேசரி ,எதிரி ,பிடிக்காத வில்லன் சிரிப்பு பத்தி ஸ்பெஷல் கிளாசாம் !!

  ReplyDelete
 40. கீதா டீச்சர் வராம கிளாஸ் கிளாஸ் மாதிரியே இல்லை

  டீச்சர் லீவே போட மாட்டாங்களே ! என்ன காரணமோ !

  We Miss U Teacher!!

  ReplyDelete
 41. சே, நான் ப்ரியா இப்போ சரியா னு என்ன ஒரு எதுகை, மோனை (???))) யோட தமிழறிவு பொங்கக் கேட்டிருக்கேன். அதைப் பாராட்டத் தெரியலை ரெண்டு பேருக்கும்! :P

  ReplyDelete
 42. //ப்ரியா, இப்போ சரியா?? :))))))//

  அட்சோ !நான் அன்னைக்கே இதை படித்து சிரித்தேன் மிஸ் ;நான் ஏதாவது

  ரொம்ப ரசித்து கமெண்ட்ஸ் போட போய் அப்புறம் அந்த பொல்லாத புவனா

  பிரியா நீ ஒரு கொரியா இப்போ சரியா என்று ஏதாவது எழுதுவாளோ என்ற அச்சம் தான் காரணம் மிஸ் !

  அவ வர வர ரொம்ப ரொம்ப வம்பு குறும்பு எல்லாம் பண்றா ! உங்க கிட்டே சொன்னாலும்

  உங்க செல்ல மாணவின்னு கண்டிக்க கூட மாட்டேங்கிறீங்க

  நேரம் கிடைத்தால் அவங்களை கூட்டி வந்து உங்க கிட்டே அர்ச்சனை வாங்க வைக்கணும்

  அதை என் ரெண்டு காதாலே கேட்டு ரசிக்கணும்!:) :)

  ReplyDelete
 43. ஆடு நனையுதேன்னு எந்த தங்கை ஆடும் (ஓ நாய்ன்னு சொல்ல பழகிய பாசம் தடுக்குது ! ) அழ வேண்டாம் !!

  ReplyDelete
 44. பாருங்க கீதாம்மா ! இந்த புவனா பெரிய பொருளாதார மேதை ஆகிட்டு வராளாம்;PM .,CM எல்லாம் எந்த சந்தேகம் இருந்தாலும் இவங்களை கேட்டு தான் தெளிவு பெறுவாங்களாம் என்று சொல்லுவதை !!

  யாருக்கு சந்தேகம் இருந்தாலும் அவங்க பதிவை படித்தா போதுமாம் ! ஆல் கிளியர் ஆகிடுமாம் !

  ReplyDelete
 45. உடனே ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வந்து பதிலை சொல்லுங்க !

  வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் !

  ReplyDelete
 46. ஹி ஹி ! முதல் முதலா 50 வது பின்னூட்டம் போடறேன் என்று சொல்ல வந்தேன் தங்கம்!

  வரும் 2011 உங்களுக்கு இனிய வருடமாய் அமைய என் பிரார்த்தனைகள். இருவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 47. இது என்ன?? எனக்குத் தெரியாம ரெண்டு பேரும் மறுபடியும் வம்பா??? க்ளாசிலே ஒழுங்காப் பாடம் படிக்கணும், தெரிஞ்சுதா?? :)))))) இப்படிக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கப்போனா உடனே சளசளனு பேச்சு! :)

  ReplyDelete
 48. அவ தான் டீச்சர் அடிக்கிறா ,கிள்ளி கிள்ளி வைக்கிறா .,என்னை வம்புக்கு இழுக்கறா ..நீங்க அவளை மட்டும் ஒண்ணுமே சொல்ல மாட்டுகிறீங்க!!

  அப்புறம் டீச்சர், கொஞ்சமா ரெஸ்ட் எடுக்கறேன்னு ஜோக் எல்லாம் அடிக்காதீங்க !
  நீங்க இந்த கிளாசுக்கு வந்தே பல நாள் ஆச்சு!
  எண்ணங்கள் A கிளாஸ் மட்டும் தான் ரெகுலரா போறீங்கலாம்! சாப்பிட வாங்க C கிளாஸ் க்கு தீபாவளி பொங்கல் க்கு மட்டும் தான் வருவீங்கலாம்னு ப்ளாக் பூரா பேச்சு !

  ஆஹா!! ஆச்சு! பேச்சு! டீச்சர் இந்த எதுகை மோனைக்கு என்ன சொல்ல போறாங்க ! பார்ப்போம்

  ReplyDelete
 49. எஸ் எஸ்... இந்த ப்ரியா தான் டீச்சர் உங்கள ரெஸ்ட் எடுக்க விடாம ரகளை... பெஞ்ச் மேல ஏறி நிக்க சொல்லுங்க டீச்சர்... (ஹா ஹா ஹா)

  ReplyDelete
 50. தீபாவளி பொங்கல் க்கு மட்டும் தான் வருவீங்கலாம்னு ப்ளாக் பூரா பேச்சு ! //

  ஹிஹிஹி!!

  சரி, சரி, இதுக்கு ஒரு ஸ்பெஷல்க்ளாஸ் வைக்கணும் போல! :)))))

  இப்போ ரெண்டு பேரும் நான் இல்லாதப்போ பேசினதுக்கு பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க. திரும்ப நான் வந்து சொல்றவரைக்கும் பெஞ்சு மேலே ஏறி நின்னுட்டு இருக்கணும்! ஏடிஎம், முக்கியமா நீங்க! :))))))))))

  ReplyDelete
 51. தேங்க்ஸ் டீச்சர் ! .......

  டீச்சர் செத்த வாங்களேன் !
  ATM பென்சு மேல ஏறி நின்னுகிட்டு பரத நாட்டியம் ஆடறா !!

  ReplyDelete
 52. ச்சே... என் திறமை எனக்கே தெரிலயே... பெஞ்ச் மேல கூட நான் பரதநாட்டியம் ஆடறேனா? ஹா ஹா அஹ... நன்றி ப்ரியா அக்கா... (ஆனா பெஞ்ச் ஒடைஞ்சா எங்க அக்கா தான் காசு குடுப்பாங்க)

  அக்கா - நீ கூட கதகளி நல்லாவே ஆடற... (இது ஆடினா பெஞ்ச் இன்னும் சீக்கிரம் ஓடையும் டீச்சர்... )

  ReplyDelete
 53. ரெண்டு பேரும் ஒழுங்கா இந்த ஐடியிலேயே வரும் இன்னொரு வலைப்பக்கத்தில் உள்ள திருவெம்பாவைப் பதிவுகளைப் படிங்க. அதான் தண்டனை. என் பயணங்களில் என்ற தலைப்பிலே இருக்கும். போங்க, சீக்கிரமா! :)))))) தேர்வு இருக்கும்!

  ReplyDelete
 54. புவனா! என்னடி பண்றது ! டீச்சர் இப்படி சொல்றாங்களே !
  எல்லாம் உன்னாலே தான் !
  நீதான் ஆடலாம் ;பாடலாம் ;கொண்டாடலாம்னு சொன்னே !இப்போ பாரு!
  எப்படிடி அவ்வளோவும் படிக்க முடியும் !

  ReplyDelete
 55. ஐயையோ...எக்ஸாம்ஆ? யாரும் இதெல்லாம் சொல்லவே இல்ல... மிஸ் மிஸ் சிலபஸ் ரெம்ப tough ஆ இருக்கு மிஸ்... inky pinky ponky போடற மாதிரினா நான் எக்ஸாம்க்கு வரேன்... இல்லைனா எனக்கு இப்பவே எக்ஸாம் டே fever ...
  (priya can write exam on my behalf...ha ha ha)

  ReplyDelete
 56. ஏடிஎம், அதெல்லாம் தப்பிக்க முடியாதாக்கும், என்னனு நினைச்சீங்க?? ஒழுங்காப் படிச்சுட்டு வந்து எழுதுங்க! :))))

  ReplyDelete
 57. @ ATM
  வாப்பா ;மொத்தம் 30 LESSONS தான்
  ரொம்ப ஈஸியா இருக்குப்பா
  நான் ஒரு LESSON படிச்சு முடிச்சு டீச்சர் கிட்டே காண்பிச்சு ட்டேன்
  எப்போவும் பெருமாள் பத்தி தான் படிக்கிறோம் ;ஈசனை பத்தியும் தெரிஞ்சுக்கலாமே
  நானும் முதல்லே தயக்கத்தோடு தான் படித்தேன் ;படிக்க படிக்க நல்லா இருந்தது
  சும்மாவே உனக்கு டீச்சர் தட்டு வடை செய்து தராங்க;அவங்க சொல்றது செய்தேனா இன்னும் சாப்பிடறதுக்கு என்னென்ன தருவாங்க !
  யோசிச்சு பாரு! வாடி ரொம்ப தான் பிகு பண்ணிகாதே !

  ReplyDelete
 58. Okay Miss...I will read in weekend... Priya said she will help me too (lets see.. ha ha)

  //சும்மாவே உனக்கு டீச்சர் தட்டு வடை செய்து தராங்க;அவங்க சொல்றது செய்தேனா இன்னும் சாப்பிடறதுக்கு என்னென்ன தருவாங்க !
  யோசிச்சு பாரு! வாடி ரொம்ப தான் பிகு பண்ணிகாதே//
  un dealing enakku pidichu irukku sister...idho vandhutte irukken...ha ha ha

  ReplyDelete