வேப்பம்பூ ரசம்:- வேப்பம்பூ உடம்புக்கு ரொம்ப நல்லது. இதை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டுக்கொண்டு சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வேப்பம்பூ, ஓமம், சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு இந்துப்புச் சேர்த்துப் பொடித்தும் சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். வேப்பம்பூப் பூக்கும் காலத்தில் வேப்பம்பூவைப் பொறுக்கிச் சுத்தம் செய்து நன்கு அலசி மோரில் உப்புப் போட்டு ஊற வைத்துக் கொண்டு அதை வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இந்த வேப்பம்பூ ரசம் செய்வது எப்படினு பார்ப்போம். நான்கு பேருக்கான அளவு. புளி ஜலம் இரண்டு கிண்ணம். தக்காளி தேவையானால் போடலாம். உப்பு தேவைக்கு. பெருங்காயம் கொஞ்சம் போல் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன். வறுக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன்,கடுகு, வேப்பம்பூ ஒரு டேபிள் ஸ்பூன், மி.வத்தல் ஒன்று.
புளி ஜலத்தில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டுக் கொதிக்க வைத்துக் கொண்டு தேவையான நீரை விட்டு விளாவவும். பின்னர் நெய்யில் கடுகு போட்டு,மி.வத்தலையும் போட்டு வறுத்துக் கொண்டு வேப்பம்பூவைப் போட்டு நன்கு வறுக்கவும். அதை அப்படியே சூடாக ரசத்தில் கொட்டவும். சூடாக ரசம் இருக்கும்போதே சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
இன்னொரு முறையில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, து.பருப்பு, மிளகு நெய்யில் வறுத்துக்கொண்டு அதோடு வேப்பம்பூவையும் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் பொடி செய்து ரசம் விளாவியதும் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் கடுகு தாளிக்கலாம். இம்முறையில் வேப்பம்பூ நன்றாக ரசத்துடன் கலக்கும்.
ஓம ரசம். இதற்கு ஓமம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளி கரைத்த நீரில் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விட்டுப் பின்னர் மிளகு, ஜீரகம், துவரம்பருப்பு வெறும் வாணலியில் வறுத்த பொடியைப் போட்டு விளாவிக் கூடவே ஓமப் பொடியையும் கொஞ்சமாகச் சேர்க்கவும். அதிகம் சேர்த்தால் கசந்து விடும்.
தூதுவளை ரசம்: தூதுவளை இலைகள் ஒரு கைப்பிடி பறித்து நன்கு அலசி வைத்துக்கொள்ளவும். மி.வத்தல், மிளகு, ஜீரகம், துவரம்பருப்போடு தூதுவளை இலையைச் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஒன்றரைக்கிண்ணம் புளி ஜலத்தை உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவிடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி விடவும். கீழே இறக்கி நெய்யில் தாளிக்கவும்.
இப்போதெல்லாம் பெரும்பாலும் ரசத்தை வைக்கையில் வற்றல் குழம்புக்குத் தாளிக்கிறாப்போல் அடியில் தாளித்துக் கொண்டு மிளகு, ஜீரகக்கலவை, மற்றும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கிப் பின்னர் புளி ஜலத்தை விட்டுக் கொதிக்க விடுகின்றனர். இது பாரம்பரிய முறை அல்ல. புளி ஜலம் கொதித்ததும் ரசத்துக்கு விளாவுதலே சரியான முறை. குழம்பு கொதிக்கணும். ரசம் காயணும் என்பார்கள். ஆகவே ரசம் காய்ந்ததும் விளாவ வேண்டும். பின்னர் ஒரே கொதியில் மேலே நுரைத்து வந்ததும் இறக்கிவிடலாம். இதைப் பருப்புப் போட்டுப் பருப்பு ரசமாகவும், பூண்டு சேர்த்துப் பூண்டு/தூதுவளை ரசமாகவும் பண்ணலாம்.