எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, February 5, 2019

உணவே மருந்து! சாமை மற்றும் மற்ற சிறுதானியங்கள்.

சிறுதானிய வகையில் இதற்கும் முக்கியத்துவம் உண்டு. இதையும் தொடர்ந்து சமைத்து உண்டால் சர்க்கரை நோய் நீங்கும். அதிகமான நா வறட்சிக்கும் இது அருமருந்து.  இரும்புச்சத்து அதிகம் உள்ளவற்றில் சாமையும் ஒன்று. ரத்த சோகை வராமல் தடுப்பதோடு உடல் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்த உணவாக இருப்பதால் இளம்பெண்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒன்று.  நெல் அரிசியைக் காட்டிலும் ஏழுமடங்கு நார்ச்சத்து இதில் இருப்பதால் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும்.  மலச்சிக்கலைப் போக்கி தாதுக்களை அதிகரித்து உயிரணுக்களை எண்ணிக்கையில் உயர்த்தும் தன்மை கொண்டது சாமை!

இந்தப் பயிர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விளையும்.  சாமையைப் பயிரிட்டால் முளைத்து வர ஒரு வாரம் ஆகும். சாமைப் பயிருக்குப் பூச்சி நோய்த் தாக்குதல் இருக்காது. இதன் மாவு மூலம் ரொட்டி, கேக், பிஸ்கட் போன்றவையும் தயாரிக்கின்றனர்.  சாதாரண நெல்லரிசி மூலம் நாம் தயாரிக்கும் எல்லாவித உணவு வகைகளையும் சாமை மூலமும் தயாரிக்கலாம். பொதுவாக எல்லா சிறுதானிய உணவுகளுக்கும் பொதுவான ஒரு குணம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது.மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ரத்தசோகை வராமல் தடுப்பது! இதில் எல்லாவற்றையும் கலந்து போட்டுச் செய்த குழி அப்பம் ஒன்றின் செய்முறையைக் கீழே கொடுக்கிறேன்.



வரகில் சாதம், பொங்கல், சோள ரவையில்   கிச்சடி, சாமையில் பொங்கல், குதிரைவாலியில் பொங்கல், சாதம், கம்பில் அடை, வரகுப் புழுங்கல் அரிசியில் இட்லி, தோசை என்றெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. தினை ஒண்ணு தான் பாக்கி இருந்தது. ஆகவே நேற்று இரவு தினை+குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நனைத்து இன்று காலை குழி ஆப்பம் செய்தேன். அதான் மேலே படம். குழி ஆப்பம் நன்றாக வந்தது. எடுத்தது படம் எடுக்கிறதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு  வரவே பேசிட்டு வந்து மறந்து போச்சு! தொட்டுக்கத் தக்காளித் தொக்கு. என்ன சிவப்பா இருக்கேனு பார்க்காதீங்க. நல்லாப் பழுத்த சிவந்த நிறமுள்ள நாட்டுத் தக்காளிகள் எல்லாம். அதான்! இப்போத் தினையில் குழி அப்பம் பண்ணத் தேவையான பொருட்கள்.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

தினை அரிசி அரைக்கிண்ணம் ஆனால் எனக்கு ஒரு வேளைக்குப் போதும் என்பதால் ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

அதே போல் குதிரைவாலி அரிசியும் அரைக்கிண்ணம் என்பதற்கு ஒரு குழிக்கரண்டி தான் போட்டேன்.

உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம் நான் கால் கிண்ணம் போட்டேன்.

ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு கைப்பிடி பச்சரிசி, இல்லைனா செய்யும் போது அரைக்கரண்டி பச்சரிசி மாவைக் கலந்துக்கலாம். நான் சேர்த்தே நனைத்து விட்டேன்.

நேற்றிரவே எல்லாவற்றையும் களைந்து ஊறப்போட்டுவிட்டேன். காலையில் இவற்றோடு மிவத்தல் நாலு அல்லது ஐந்து (அவரவர் காரத்துக்கு ஏற்றாற்போல்) நான் நாலு தான் போட்டேன்.

உப்பு தேவைக்கு ஏற்ப, பெருங்காயம் இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன். இரும்புக்கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு சேர்த்துக் கருகப்பிலை கிள்ளிப் போட்டு ஒரு சின்னப் பச்சைமிளகாய நீள வாக்கில் வகிர்ந்து உள்ளே உள்ள விதைகளை நினைவாய் எடுத்துட்டு அதை நறுக்கிச் சேர்த்தேன். இஞ்சி ஒரு துண்டு. எல்லாவற்றையும் எண்ணெயில் போட்டு வதக்கி மாவில் சேர்த்தேன். தேங்காய் இருந்தால் பல்லுப்பல்லாகக் கீறிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்கும் நாட்களில் வெங்காயத்தையும் வதக்கிச் சேர்க்கலாம். இப்போ வெங்காயம் சேர்க்க முடியாது என்பதால் சேர்க்கவில்லை. தேங்காயும் போடவில்லை.

மாவு ரெடி. என்னோட அப்பக்காரை எங்கேயோ பெட்டியில் மாட்டிக் கொண்டு பல மாதங்களாகின்றது. அதை எடுக்கவே இல்லை. ஆகவே ஒரு இரும்புக்கரண்டியில் குத்தலாம்னு நினைச்சேன். ஆனால் மாவு ஊற்றியதும் மேலே உப்பிக் கொண்டு வரும் என்பதால் இரும்புக்கரண்டி போல இருக்கும் நான் ஸ்டிக் கரண்டி ஒன்றில் எண்ணெயைக் காய வைத்து ஊற்றினேன் நினைத்தாற்போலவே நன்கு உப்பிக் கொண்டு வந்தது. அதைத் திருப்பிப் போட உபயோகிக்கும் இரும்புக் குச்சியும் அம்பத்தூரிலிருந்து வரும்போது எங்கே தவறி விட்டது. ஆகையால் ஒரு ஸ்பூன் முனையால் திருப்பிப் போட்டேன். திருப்பிப் போட்டு உள்ளே ஸ்பூன் முனையாலேயே குத்தி விட வேண்டும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.  இது மேலே நன்றாகச் சிவந்து பொன்னிறமாக முறுமுறுவென்றும் உள்ளே கடற்பஞ்சு (sponge) போலவும் இருந்தது.


10 comments:

  1. இது நீங்க எங்களுக்குக் கொடுத்த இலுப்புச் சட்டி தோசை மாதிரின்னா இருக்கு. நீங்க குழி அப்பம் என்று சொல்றீங்க (பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு நீங்க எந்தப் பேரை எழுதினாலும் நாங்க ஒத்துகணும்னு மனசு சொல்லுது)

    ReplyDelete
    Replies
    1. இரும்புச் சட்டியில் (சின்ன மொட்டைச் சட்டி) நீங்க வந்தப்போப் பண்ணினேன். இது நான் ஸ்டிக். நான் அதிகம் பயன்படுத்த மாட்டேன். இரும்புச் சட்டியில் பண்ணினால் பெரிசா இருக்கும் என்பதால் இதிலே செய்தேன்.

      Delete
  2. இது மிளகாய்ப்பொடி தொட்டுண்டா ரொம்ப நல்லா இருக்கும் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. இந்த மாவே காரம் போட்டு அரைச்சது. அப்படியேவும் சாப்பிடலாம். மி.பொடி, தே.சட்னி, த.சட்னி, தொக்கு போன்றவற்றோடும் சாப்பிடலாம்.

      Delete
    2. நெல்லை அப்படியே சாப்பிடவே நல்லாருக்கும். நானும் காரம் எல்லாம் போட்டு அரைச்சா சட்னி ஸ் தான். மி பொ விட சட்னிஸ் நல்லாருக்கும்

      கீதா

      Delete
  3. வீட்டில் துணைவியாரும் படித்தார்கள்... பதிவின் இணைப்பை அனுப்பச் சொன்னார்கள்...

    நன்றி அம்மா...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு அனுப்பணும் டிடி? இதை முன்னாடியே பார்க்கலையே!

      Delete
  4. கீதாக்கா நானும் எல்லாத்தையும் போட்டு செஞ்சு பார்த்துட்டேன்....குழிப்பணியாரம்...போன வாரம் கூட செஞ்சேன்....படம் எடுக்க முடியலை. அடுத்த முறை செய்யும் போது படம் எடுக்கனும்...

    நான் அரைக்கும் போது ப மி கூட சில சமயம் சேர்த்து அரைச்சுருவேன். க வேப்பிலை காய வைத்ததை பொடி பண்ணி போட்டுருவேன் மாவு வார்க்கும் முன். இதே போலத்தான். உங்க குறிப்பையும் நோட் பண்ணிவிட்டேன்.

    நல்ல புஸ்ஸென்று வரும் நானும் ஸ்பூன் வைத்துதான் திருப்பறேன். குச்சி இல்லை. அதுவும் இட்லி எடுக்கும் ஸ்பூனால் திருப்பி விடுவேன்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நம்ம வீட்டில் எல்லாம் ஒரு சீசன்! இப்போக் கொஞ்ச நாட்களாக அவரோட மோகம் புளி உப்புமா மேல் திரும்பி இருக்கு! எனக்கு ராத்திரி சாப்பிட்டால் ஒத்துக்கறதில்லை. அதனால் பண்ணுவதில்லை. :)

      Delete