எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 30, 2017

உணவே மருந்து! புதினா!

புதினாத் துவையல்: ஒரு கட்டுப் புதினா! நிறையப் பேர்ன்னா ஒரு கட்டு பத்தாது. ஆய்ந்து வதக்கினால் கொஞ்சமா ஆகி விடும். ஆகவே அதற்குத் தகுந்தாற்போல் எடுத்துக்கவும். இங்கே இரண்டே பேர்களுக்கான அளவைச் சொல்லி இருக்கேன்.

புதினா ஒரு கட்டு

மிளகாய் வற்றல் நான்கு(காரம் அதிகம்னால் இரண்டே போதும்.)

புளி ஒரு சின்ன அரிநெல்லிக்காய் அளவுக்கு எடுத்து ஊற வைத்துக் கொள்ளவும்.

உப்பு தேவையான அளவு

கடுகு, உ.பருப்பு, ஒரு டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்னத் துண்டு

வதக்க நல்லெண்ணெய்  ஒரு டேபிள் ஸ்பூன்

கடலை எண்ணெயில் எல்லாம் வதக்கினால் அவ்வளவு நன்றாக இருக்காது. ஆகவே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்துக் கொண்டு தனியாக வைக்கவும். பின்னர் மி.வற்றலைப் போட்டுக் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். புதினாக்கட்டை நன்கு பிரித்து ஆய்ந்து கழுவி நீரை வடிய விட்டு எண்ணெயில் போட்டு நன்கு சுருள வதக்கவும். எல்லாம் ஆறினதும் மிக்சி ஜாரில் மி.வத்தல், உப்பு, பெருங்காயம், புளி போட்டு முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் வதக்கிய புதினாவைப் போட்டு அரைக்கவும். எடுக்கும்போது வறுத்த கடுகு, உபருப்பைப் போட்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு எடுத்துவிடவும். கரகரவென இருக்கட்டும். சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடலாம்

புதினா சட்னி

புதினா ஒரு கட்டு

பச்சை மிளகாய் நான்கு அல்லது ஆறு காரத்திற்கு ஏற்றாற்போல்

இஞ்சி ஒரு துண்டு

உப்பு

எல்லாவற்றையும் நன்கு கழுவிக் கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். இதற்குப் பெருங்காயம் சேர்க்க வேண்டாம். விருப்பம் எனில் சேர்க்கலாம். இதைக் கெட்டியாக அரைத்து வைத்துக் கொண்டு சாட் செய்யும் நாட்களில், பானி பூரி சாப்பிடும் நாட்களில், பேல்பூரி கலந்தால் அப்போது இரண்டு ஸ்பூன் சட்னிக்குக் கால் கப் நீர் சேர்த்துக் கரைத்துக் கொண்டு அதன் மேல் ஊற்றிக் கொண்டு இனிப்புச் சட்னியும் சேர்த்துச் சாப்பிடலாம். தயிர் வடை வட இந்திய முறையில் பண்ணுவதற்கும் இதை விட்டுக் கொள்ளலாம்.

புதினாவோடு காய்களையும் சேர்த்து வதக்கிக் கொண்டு சப்பாத்திக்கு சைட் டிஷ் பண்ணலாம்.

புதினா ரைஸுக்குப் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினாவை உப்புச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்/ சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, ஏலக்காய், பட்டை தாளித்துக் கொண்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதற்குத் தக்காளி வேண்டாம். வெங்காயம் பாதி வதங்குகையில் அரைத்த விழுதைப்போட்டுக் கிளறவும். நன்கு எண்ணெய் பிரிந்ததும் சாதத்தை அதில் சேர்த்து மெதுவாகக் கிளறிக் கொண்டே நன்கு கலக்கவும்.  உப்புப் பார்த்துக் கொண்டு தேவை எனில் கொஞ்சமாய் உப்புச் சேர்க்கவும். இதற்குப் பச்சைப் பட்டாணியாகக் கிடைத்தால் வாங்கித் தோலுரித்துச் சுத்தம் செய்து வெங்காயம் வதக்குகையில் கூடப் போட்டு வதக்கிச் சேர்க்கலாம். காய்ந்த பச்சைப்பட்டாணியைச் சேர்ப்பது எனில் முதல் நாளே ஊற வைத்துவிட்டு மறுநாள் சாதம் வடிக்கையில் அதோடு சேர்த்து வேகவிட்டு எடுத்துக் கொள்ளலாம். பூண்டு பிடிக்காதவர்கள் புதினா அரைக்கையில் பூண்டு சேர்க்காமல் இஞ்சி மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். 

9 comments:

 1. புதினாவில் சமையல் குறிப்புகள். சில செய்வதுண்டு. புதினா சாதம் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. புதினா சாதம் நிறையப்பேருக்குப் பிடிக்காது வெங்கட்! உங்களுக்குப் புதினா பிடிக்கும் என்பதால் பிடிக்கலாம். :)

   Delete
 2. /பின்னர் மி.வற்றலைப் போட்டுக் கருகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். புதினாக்கட்டை நன்கு பிரித்து ஆய்ந்து கழுவி நீரை வடிய விட்டு எண்ணெயில் போட்டு நன்கு சுருள வதக்கவும். //

  ​முன்னாலேயே செய்து தயாராய் வைத்துக் கொள்ளலாம் இல்லையா!​!!!!!

  புதினா சட்னிக்கு நாங்கள் கொஞ்சம் கொத்துமல்லியும் சேர்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ​//முன்னாலேயே செய்து தயாராய் வைத்துக் கொள்ளலாம் இல்லையா!​!!!!!// புரியலை ஶ்ரீராம், என்ன சொல்லறீங்க?

   Delete
  2. சாட் செய்வதற்கெனப் பச்சைச் சட்னி செய்கையில் புதினாவோடு பச்சைக் கொத்துமல்லியும் வைப்பேன். தனியாப் புதினாத் துவையல், கொத்துமல்லித் துவையல்னா அதிலே எதுவும் கலப்பதில்லை. :)

   Delete
  3. பெருங்காயம் பொரித்துக்கொண்டு, மிளகாய் வற்றலை கருகாமல் வறுத்துக்கொண்டு பின்னர் புதினா கட்டை எடுத்து பிரித்து ஆய்ந்து கழுவுவதற்கு பதில் இதை முதலிலேயே செய்து வைத்துவிட்டு, அப்புறம் பெருங்காயம் பொரித்து மிளகாய் வறுத்து என்று தொடங்கலாம் இல்லையா என்று ஜோக் அடிக்க முயற்சித்தேன்...!!! :(

   ஹப்பாடி.. போங்க அக்கா... ஒரு ஜோக் கூட அடிக்க முடியலை!

   Delete
  4. ஹிஹிஹி, அ.வ.சி. அதை முதல்லேயே சொல்லலையேனு அப்புறமாச் சேர்த்தேனா, இடம் மாறி வந்திருக்கு! அப்புறம் பொருள் இல்லாமல் போயிடுமேனு திருத்தும்போது அப்படியே சரி செய்தேன். அதனால் புதினாவை ஆய்ந்து வைக்க தாமதம்! :)))) கண்ணிலே விளக்கெண்ணெய் ஜாஸ்தி! :)

   Delete
  5. எங்கே? நெ.த.? எல்லாரோட பதிவுகளிலும் பார்த்தேன், இங்கே வரலை, புதினா பிடிக்காதுன்னா? :)

   Delete
 3. இப்போதுதான் உங்க கமென்டைப் பார்த்தேன். கீசா மேடம்... நீங்க ஒரே தலைப்பை வைக்கும்போது, முன்னமே படித்துவிட்டோமேன்னு தோணிடுது. அதனாலதான் இங்க வந்திருக்கமாட்டேன்.. வெறும்ன புதினா பிடிக்காததனால் இல்லை.

  வந்திருந்தேன்னா, எனக்கு புதினாவே பிடிக்காது, இதுல எங்க மற்ற செய்முறையைச் செய்துபார்க்கிறது என்றாவது பின்னூட்டம் போட்டிருப்பேன்.

  ReplyDelete