சேனைக்கிழங்கில் பிட்லை சாப்பிட்டிருக்கீங்களா? நல்லாவே இருக்கும். :)
சேனைக்கிழங்கு நீள வாக்கில் நறுக்கிய துண்டங்கள் ஒரு கிண்ணம். பச்சைக் காராமணி (பயத்தங்காய்) நூறு கிராம் வாங்கிக் கொஞ்சம் நீள வாக்கிலேயே நறுக்கிக் கொள்ளவும். இதைத் தவிரவும் மொச்சை, காராமணி(விதை) ஊற வைத்தது இரண்டு டேபிள் ஸ்பூன். புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.
வறுத்து அரைக்க: மிளகாய் வற்றல் மேற்சொன்ன அளவுக்கு ஆறு, ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை(தேவையானால்) நான் போடுவதில்லை. ஆறு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்துக் கொஞ்சம் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும். விருப்பப் பட்டால் வெல்லம் ஒரு டீஸ்பூன் தூளாக.
துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, உபருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி.
சேனைக்கிழங்கை முதலில் இரண்டாம் கழுநீரில் வேகவைத்துக் கொட்டிக் கொள்ளவும். பயத்தங்காய் அல்லது பச்சைக்காராமணியைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு வேக விடவும். ஊற வைத்த மொச்சை, காராமணியையும் சேர்க்கவும். அது வேகும்போதே சேனைக்கிழங்கையும் சேர்க்கவும். காய்களுக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு, அதற்குத் தேவையான உப்பை மட்டும் போடவும். மறதிப் பேர்வழி எனில் முதலில் காய் வேகும்போது உப்புச் சேர்க்காமல் புளிக்கரைசலை ஊற்றிவிட்டுப் பின்னர் சேர்த்துப் போடவும். புளி வாசனை போகக் கொதித்ததும், வெந்த துவரம்பருப்பு சேர்த்துக் கொண்டு, அரைத்த விழுதையும் போட்டுக் கலந்து கொதிக்க விடவும். சேர்ந்தாற்போல் கொதித்ததும் கீழே இறக்கிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, மி.வற்றல் தாளித்துக் கருகப்பிலையையும் போட்டுப் புரட்டிக் கொட்டவும். பச்சைக் கொத்துமல்லி தூவவும். சாதத்தோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்.
அடுத்து சேனைக்கிழங்கில் பருப்புப் போடாத வெறும் குழம்பு. இதற்குச் சேனைக்கிழங்கு நறுக்கிய துண்டங்கள் ஒரு சின்னக் கிண்ணம், மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி(ஊற வைக்க வேண்டாம்) தாளிக்க எண்ணெய் நல்லெண்ணெயாக இருத்தல் நலம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை உப்பு தேவையான அளவு. குழம்புப் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகள்
புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து நன்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
கடாய்/வாணலி/உருளியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், மி.வத்தல் கருகப்பிலை தாளிக்கவும். அந்தக் காய்ந்த எண்ணெயிலேயே கொண்டைக்கடலை, மொச்சை, காராமணி போன்றவற்றைப் போட்டு வெடிக்க விடவும். வெடித்ததும், சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டுக்கொண்டு, பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகளையும் போட்டு அந்த எண்ணெயிலேயே வதக்கவும். பின்னர் உங்கள் குழம்புப் பொடி வறுத்துச் செய்யவில்லை எனில் அந்த எண்ணெயிலேயே போட்டு வறுக்கவும். அதன் பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்புப் போட்டுக் கொதிக்க விடவும். சேர்ந்து வருகையில் தேவையானால் வெல்லம் சேர்க்கவும். கீழே இறக்கி வைத்து வறுத்த வெந்தயத் தூள் அரை டீஸ்பூன் சேர்க்கவும். சாதம், அடை, அரிசி உப்புமா போன்றவற்றிற்கு ஏற்ற துணை.