எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, November 27, 2011

ராஜ்மாவில் ரொட்டியா? கடவுளே!

அப்படித்தான் நானும் நினைச்சேன் முதல்லே. ஆனால் நல்லாவே இருந்தது. ஊருக்குப் போகையிலே ராஜ்மா ரொட்டி பண்ணி எடுத்துட்டுப் போகலாம்னு மருமகள் சொன்னாள். எனக்குக் கொஞ்சம் யோசனை தான். அன்றே சாயந்திரமாப் பண்ணினா. சாப்பிட்டால் நல்லாவே இருந்தது. எனக்குத் தெரிந்த வரையில் அவள் போட்டிருந்த பொருட்கள்:

ராஜ்மா ஒரு கப் முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவு ராஜ்மா விழுதுக்கு இரண்டு கப் கோதுமை மாவு தேவைப்படும்.

மற்றத் தேவையான பொருட்கள்: மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, உப்பு, மாவில் கலக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். மாவு பிசைய நீர். ரொட்டியைத் தட்டி எடுக்கத் தேவையான எண்ணெய் தனியாக.

கோதுமை மாவில் ராஜ்மா விழுதைப் போட்டுக் கலந்து கொண்டு அதோடு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், அம்சூர் பொடி, தேவையான உப்புச் சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான நீர் சேர்த்து மாவை நன்றாகப் பிசையவும். ரொட்டி மாவு பதத்துக்கு வந்ததும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் ரொட்டியை ஒவ்வொன்றாக இட்டுத் தவாவில் எண்ணெய் தடவிப் போட்டுச் சுட்டு எடுக்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ள ராய்தா எனப்படும் பச்சடி நன்றாக இருக்கும்.

ராய்தா:

வெங்காயம், காரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டுப் பச்சைக் கொத்துமல்லி போட்டு, நல்ல கெட்டித் தயிரில் உப்பு, ஜீரகப்பொடி, காலா நமக் பொடி ஒரு சிட்டிகை போட்டுக் கலந்து வைக்கவும்.

5 comments:

 1. ராஜ்மாவில் எதுவும் செய்து பார்த்தது இல்லை ;இனி மேல் தான் செய்து பார்க்க வேண்டும்:)

  ReplyDelete
 2. ராஜ்மாவில் எதுவும் செய்து பார்த்தது இல்லை ;இனி மேல் தான் செய்து பார்க்க வேண்டும்:)

  ReplyDelete
 3. மாட்டுப் பெண்ணிற்குத் தயக்கம் படம் எடுக்க. அதனால் இன்னொரு நாள் பார்க்கலாம்னு விட்டுட்டேன். :)))))

  ReplyDelete
 4. ப்ரியா, ராஜ்மாவின் ருசி பிடிக்க ஆரம்பித்தால் அப்புறமா அடிக்கடி செய்யச் சொல்லும்.

  ReplyDelete