எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, April 16, 2011

வட இந்திய உணவு வகைகள், பேல் பூரி!

வட இந்திய உணவு வகைகள் பற்றி ஒருமுறை கமலம் கேட்டிருந்தார். அதிலே பேல் பூரி, பானி பூரி, சனா பட்டூரா போன்றவற்றை அறிந்த்தில்லை என்றார். சில குறிப்புகள் இங்கே:

முதலில் பேல் பூரி: இதற்கு முக்கியத் தேவை அரிசிப் பொரிதான். அதோடு வேக வைத்த உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வீட்டில் செய்த அல்லது கடையில் வாங்கிய ஓமப்பொடி, வறுத்துக் காரம் போட்ட கடலைப்பருப்பு அல்லது வேர்க்கடலை(பிடித்தமானால்) மாதுளை முத்துக்கள்(பிடித்தமானால்) பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைக்கொத்துமல்லி குறைந்த பக்ஷமாக ஒரு கட்டாவது இருத்தல் நலம். எலுமிச்சைச் சாறு ஒரு சின்னக் கிண்ணம். பச்சைச் சட்னி, இனிப்புச் சட்னி. சின்னச் சின்ன பூரிகள் பேல் பூரியில் கலக்க. சட்னி வகைகளை முன் கூட்டியே தயாரித்து வைத்துக்கொள்ளுதல் நல்லது. இதைத் தவிர இந்த பேல்பூரியில் கலக்கவேண்டிச் சின்னச் சின்ன பூரிகள் செய்து வைத்துக்கொள்ளலாம். இந்த பூரிகளைச் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது கலந்து கொடுக்கலாம்.
முதலில் பூரி செய்யும் விதம்: ரவை ஒரு கிண்ணம், மைதா ஒரு கிண்ணம், கோதுமை மாவு ஒரு கிண்ணம். தேவையான அளவுக்கு உப்பு. பொரிக்க எண்ணெய். மாவு பிசைய நீர்.

மூன்று மாவையும் நன்கு உப்பைப் போட்டுக் கலந்துகொண்டு தேவையான நீரைச் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மறுபடி நன்கு பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொண்டு மெல்லிய பூரிகளாக இடவும். இட்ட பூரியில் ஒரு ஃபோர்க் அல்லது முள் கரண்டியால் குத்திவிடவும். இப்படிக் குத்தாமல் பொரித்தால் பூரி உப்பிவிடும். தட்டையான பூரிகளே இதற்குத் தேவை. ஆகையால் குத்திவிட்டுப் பூரிகளைப் பொரித்தெடுக்கவும். பேல் பூரி பண்ணப் போகும் நாளின் முந்தைய தினம் கூட இதைப் பண்ணி ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம். அடுத்து காரச் சட்னி அல்லது பச்சைச் சட்னி செய்யும் விதம்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு அல்லது நடுத்தரமாக இரண்டு கட்டு, பச்சை மிளகாய், (காரமானது நல்லது) பத்து அல்லது பனிரண்டு. இஞ்சி ஒரு துண்டு, பூண்டு(பிடித்தமானால், நான் பூண்டு சேர்ப்பதில்லை) இரண்டு டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு. பெருங்காயம்(தேவை எனில்)


கொத்துமல்லிக்கீரை, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும். கொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம். கெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கலாம்.

அடுத்து இனிப்புச் சட்னி: அவசரமாகப் பண்ண இது வசதி. பேரீச்சம்பழம் ஐம்பது கிராம், ஒரு சிறு உருண்டை புளி, உப்பு, மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சர்க்கரை. எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும். இதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கலாம்.

புளிச்சட்னி(இனிப்புச் சட்னி இரண்டாம் வகை) 100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும். இதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு. ஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும். மேலும் இந்த ஜீரகப் பொடி ரசம், சாட், தயிர்வடை போன்றவற்றிலும் கலக்கத் தேவைப்படும். ஆகவே நூறு கிராம் ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

இப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இருந்து கீழே இறக்கவும். இது பல நாட்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.

இப்போ பேல் பூரிக்கு வேண்டிய சாமான்கள் தயார். இவை எல்லாவற்றையும் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொண்டால் நேரே பேல்பூரியைக் கலக்க ஆரம்பிக்கலாம்.


அரிசிப் பொரி கைகளால் போட்டால் இரண்டு கை அளவு அல்லது இரண்டு பெரிய கிண்ணம் அளவு, அதே அளவு ஓமப்பொடி, நொறுக்கிய பூரிகள், (நம் விருப்பத்திற்கேற்ப பூரிகளைச் சேர்க்கலாம்) இதன் மேல் நறுக்கிய உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவை சேர்க்கவும். இதன் மேலே இரண்டு டீஸ்பூன் காரச் சட்னியை ஊற்றி, இரண்டு டீஸ்பூன் இனிப்புச் சட்னியையும் ஊற்றவும். அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும். எல்லாவற்றையும் கலக்கும் முன்னர் நறுக்கி வைத்த கொத்துமல்லிக்கீரையைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். உடனே சாப்பிடவும். பேல்பூரியை முதலிலேயே கலந்து வைத்தால் சொத சொதவென ஆகிவிடும். ஆகவே அவ்வப்போது சாப்பிடும் நபர்களுக்கு ஏற்பக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலக்கவேண்டும்.

5 comments:

 1. ஹி ஹீ நானும் பசங்க ஆசையா கேட்கிறாங்கன்னு சில மாதத்திற்கு முன்பு செய்து கொடுத்தேன்

  அதற்கு அப்புறம் கேட்கரதையே விட்டுட்டாங்க :)

  நீங்கள் சொல்லிய முறைப்படி செய்து பார்க்கிறேன் கீதாம்மா !

  ReplyDelete
 2. ப்ரியா, பேல்பூரி கலப்பதில் தான் இருக்கிறது. எல்லாவற்றையும் கலந்து கொண்டு அதன் பின்னர் சட்னி வகைகளை மேலே ஊற்றிக் கலக்காமல் கொடுங்கள். குழந்தைகள் கலந்து கொள்ளட்டும். கலந்துவிட்டால் ஊறிப் போய்ச் சொதசொதவென ஆகிவிடும். மாதுளம் முத்துக்களைக் கடைசியில் சேர்க்கவும்.

  ReplyDelete
 3. ம்ம்...சௌபாட்டி பேல்!! யம் யம் எங்க பசங்களோட ஃபேவொரிட்:))இங்க குஜராதி கல்யாணத்துல இப்ப கட்டாயம் இருக்கு ! சில சமயம் வீக் எண்ட் ல வீட்டு வேல ஜாஸ்தியானா நம்ப க்யுகும்பெர் தக்காளி, காலிஃப்லவர் பெல் பெப்பெர் ரெட் ,க்ரீன், லேசா துளி காரட் துளி பீட் 2 குட்டி ராடிஷ், கொஞ்சம் LETTUCE, DASH OF LEMON , CELANTHRO OR MINT , 1/2 CHOPPED GREEN CHILLIES AND SALT போட்டு டாஸ் பண்ணிட்டு ஹல்திராம் புஜா OR முர்முரா 1 TEESPOON SPRINKLE பண்ணி சாப்பிட்ட லன்ச் க்கு நல்லFILLING சாலட் சாப்பிட்ட மாதிரி இருக்கும் .

  ReplyDelete
 4. செய்முறை ஈசியாக இருக்கிறது....!

  ReplyDelete
 5. please panni poori ku rasam iruke athu yappadi vaippathu plz send me priyadharshini01.p@gmail.com

  ReplyDelete