எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, April 21, 2010

ஒழுங்காவே கத்துக்கறதில்லையா யாரும்???

அரைச்சுச் செய்யற புளி உப்புமா பத்திப் பார்க்கிறதுக்கு முன்னே ஒரு கேள்வி, எட்டுப் பேர் தொடர்ந்து வரீங்க? யாரானும் செய்து பார்த்தீங்களா இல்லையா? பதிலே இல்லாமல் இருந்தால் ஒழுங்காப் படிச்சீங்களா இல்லையானு நான் எப்படித் தெரிஞ்சுக்கறது? இனிமேலே கொஞ்சம் ஒழுங்கா வகுப்பைக் கவனிச்சுப் பின்னூட்டம் போடுங்க.

அரைக்கத் தேவையான பொருட்கள்: பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், பச்சரிசியை ஒரு இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கணும். அப்புறம் மிக்சியில் (இப்போ கல்லுரல், ஆட்டுக்கல் எல்லாத்துக்கும் எங்கே போறது? இருந்தாலும் தான் ரங்க்ஸ் தலையில் போட்டுடறாங்க போல!) அதனாலே பார்த்தாலே ரங்க்ஸ் பயந்துக்கப் போறார். மிக்சியில் எல்லாத்தையும் போட்டு நல்லா அரைங்க. கெட்டியா அரைச்சுக்கணும்.

அடுத்துத் தாளிக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம், கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டுக் கருகப்பிலையும் போட்டுத் தாளிக்கவும். வெங்காயம் சேர்ப்பதானால், பொடிப் பொடியாக நறுக்கின வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். அரைச்சு வைச்ச விழுதை இதில் போட்டு நல்லா உதிர் உதிரா வர வரைக்கும் கிளறவும். இது ருசி தனியா இருக்கும். அடுத்து முதல்நாளே புளி சேர்க்காமல் மற்ற சாமான்களைப் போட்டு அரைத்து வைத்துக்கொண்டு, மறுநாள் இதேபோல் தாளிதம் செய்து கிளறலாம். இது ருசி தனியா இருக்கும். மூன்று முறைகளும் செய்து பார்த்துட்டுச் சொல்லுங்க. அடுத்து மோர்க்கூழ் பார்க்கலாம்.

6 comments:

  1. இப்பத்தான் பாத்தேன்!!!!!! அரிசி புளி உப்மா!! எங்க பெரியகுளம் பாட்டி ஸ்பெஷலும் அதுதான். புழுங்கரிசி அரைச்சு பண்னறது நல்ல வாசனையா இருக்கும். கையால அரைச்சா தாவு தீந்துடும்:))

    ReplyDelete
  2. ஆமாம், புழுங்கலரிசியை அரைச்சுச் செய்யறது தனி ருசிதான். இப்போல்லாம் செய்தாலும் சாப்பிட முடியலை. :(

    ReplyDelete
  3. இந்த புளி உப்புமா நல்லா இருக்கும் போலிருக்கு. நான் புளி உப்புமான்னா, அரிசி மாவை உபயோகப்படுத்தித்தான் செய்வேன். அந்தச் செய்முறையும் எபில விரைவில் வரும்.

    ஆமாம்..இதில் பெருங்காயம் போடச் சொல்லலையே.. மறந்துட்டீங்களா?

    ReplyDelete
    Replies
    1. // பச்சரிசி ஆழாக்கு(சுமார் 250 கி) அல்லது ஒரு கப், மி.வத்தல் 4 அல்லது 6 அவங்க காரத் தேவைக்கு ஏற்ப, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், // அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைக் கவனமாகப் படிச்சிருக்கணும். அதிலேயே போட்டு அரைச்சப்புறமும் தனியா எதுக்குப் பெருங்காயம்? ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கோபத்திலே "க்" ஐ முழுங்கிட்டேன். ) :)))))))))

      Delete
  4. புளி உப்புமா என்று நாங்கள் செய்து கோடனிருப்பது வேறுரகம். அரிசியை உடைக்காமல், அரைக்காமல் புளியோடு சேர்த்து புளியோதரை பாணியில் முந்திரிப்பருப்பு எல்லாம் போட்டு செய்வோம். மும்பை பதிவர் - அவர் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது- லட்சுமி அம்மாவோ- அவர் சொல்லிக் கொடுத்தது. இப்போது அவர் எழுதுவதில்லை.

    நீங்கள் சொல்லியிருக்கும் முறையில் ஒருமுறை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. https://geetha-sambasivam.blogspot.com/2013/07/blog-post_27.html
      புளிப் பொங்கலைச் சொல்லுகிறீர்கள் என நினைக்கிறேன் அதோடு அரிசியில் புளியைக் கரைத்து விட்டு உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் , நல்லெண்ணெய் சேர்த்து வடித்து அதில் புளிக்காய்ச்சலுக்குத் தாளிப்பது போல் தாளித்தும் சாப்பிடுவது உண்டு. அதில் முந்திரிப்பருப்பு எல்லாம் போடுவோம்.

      Delete