எலுமிச்சை அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு பொருள். மிக முக்கியமானது. இதன் பலன்களை விவரிக்க விவரிக்க விரிந்து கொண்டே போகும். பொதுவாக நாம் எலுமிச்சைச் சாறில் சர்க்கரை,கொஞ்சம் உப்புக் கலந்து குடிப்போம்.எலுமிச்சை சாதம் செய்வோம். ஊறுகாய்கள் போடுகிறோம். சில உணவு வகைகளுக்குச் சுவையூட்ட எலுமிச்சைச் சாறு பயன்படுத்துவோம். உணவுப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதில் கூட எலுமிச்சை பயன்படுகிறது. சருமப் பாதுகாப்புக்கு, துணிகளில், பாத்திரங்களில் ஏற்படும் கறைகளை நீக்க என்று எலுமிச்சையின் பயன்பாடு மிக அவசியமாக இருக்கிறது.
படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக தினகரன்
உடல் எடையைக் குறைக்க தினம் காலை எழுந்ததும் அரை மூடி எலுமிச்சைச்சாறில் வெதுவெதுப்பான நீர் கலந்து ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம். எலுமிச்சைத் தோல் கூடப் பயன்படும். முகத்தில் தேய்த்துக்கொண்டால் முகம் பளிச்! பித்தளை விளக்கு, செம்புப் பாத்திரங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தம் செய்ய சாறு பிழிந்த எலுமிச்சைத் தோலைப் பயன்படுத்தலாம். இந்த எலுமிச்சைத் தோலைக் குக்கரில் வேக வைத்து மசித்து எலுமிச்சைத் தொக்கு செய்யலாம். வயிற்றில் ஜீரண சக்தி குறைவாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறைக் கலந்து குடித்து வரலாம். இதில் கொஞ்சம் ஓமம் சேர்த்துக் கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
கூந்தல் பராமரிப்புக்கும் எலுமிச்சை சிறந்தது. தலையில் பொடுகு உள்ளவர்கள் எலுமிச்சைச் சாறை ஷாம்பூ போட்டு அலசிய கூந்தலில் தடவிக் கொண்டு நீர் விட்டுக் கழுவினால் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்தால் ரத்த அழுத்தம் குறைவதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும். பெருங்குடலுக்கும் பாதுகாப்பை அளிக்கவல்லது எலுமிச்சை. உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதால் முகம் பொலிவுறும். எலுமிச்சையில் வெறும் வைடமின் சி மட்டும் இல்லை. வைடமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், மங்கனீசியம், ப்ரோட்டீன், கார்போஹைட்ரேட் என நம் உடலுக்குத் தேவைப்படும் அனைத்து சத்துக்களும் இருக்கின்றன.
பற்களைச் சுத்தம் செய்யவும் எலுமிச்சைச் சாறு பயன்படும். வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் எலுமிச்சைத் தோலால் பற்களைச் சுத்தம் செய்யலாம். பல் கூச்சம் போன்றவையும் இதன் மூலம் அகலும். கடுங்கோடையில் அரை மூடி எலுமிச்சைச்சாறில் கொஞ்சம் சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்புச் சேர்ந்துப் பானையின் குளிர்ந்த நீரை விட்டுக்கலந்து குடித்தால் தாகம் தணியும்.