இப்போ அடுத்து நாம் தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாறு அல்லது விழுதை வைத்துச் செய்யும் ஒரு சமையல் குறிப்பைப் பார்ப்போம்.
தக்காளி ப்யூரி எடுக்கும் விதம்: ஒரு கிலோவுக்குக் குறையாமல் தக்காளியை வாங்கி நன்கு கழுவிக் குக்கரில் அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டு நன்கு வேக விடவும். பின்னர் அந்தச் சாறில் இருந்து விதைகளை வடிகட்டிவிட்டு, விழுதைக் கெட்டியாகச் சேகரித்துக்கொண்டு குளிர்சாதனப் பெட்டியின் ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு உபயோகிக்கலாம். இதை உடனடியாக உபயோகிப்பதே பொதுவாக நல்லது. அப்படி நீண்ட நாட்கள் வேண்டுமெனில் வினிகர் ஊற்றிக் கலக்கி ஃப்ரீசரில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் பார்க்கப் போவது ஆலு தம் என அழைக்கப் படும் ஒரு கூட்டு. நான்கு பேருக்கான அளவு இங்கே சொல்கிறேன்.
சின்ன உருளைக்கிழங்கு அரைகிலோ வாங்கி வேக வைத்துத் தோலுரித்துக்கொள்ளவும். பின்னர் அதில் ஊசியால் சுற்றிலும் துளைகள் போடவும். துளைகள் போடுவதால் உ.கி. உடையக் கூடாது. முழுசாகவே இருக்கணும். வெங்காயம் பெரிது ஒன்று அரைக்க. தக்காளி இரண்டு அரைக்க.பச்சைமிளகாய் 2, இஞ்சி ஒரு துண்டு, கொத்துமல்லி, (பூண்டு சேர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பூண்டுப் பற்களையும் சேர்த்துக்கொள்ளலாம்) இவற்றைத் தனியாகவும், வெங்காயம் தக்காளியைத் தனியாகவும் அரைத்துக்கொள்ளவும். மிளகாய்த் தூள் இரண்டு டீஸ்பூன், கொத்துமல்லித்தூள் இரண்டு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை. தக்காளி ப்யூரி ஒரு கிண்ணம் நிறைய. வெண்ணெய் அல்லது க்ரீம் உங்கள் ருசிக்கு ஏற்றாற்போல் சாதாரணமாக இந்த அளவுக்கு அரைக்கிண்ணம் வெண்ணெய் தேவைப்படும். க்ரீம் எனில் சாப்பிடுகையில் மேலே ஊற்றிக்கொள்ளலாம். அதுவும் அரைக்கிண்ணம் இருக்கலாம். கரம் மசாலாப் பொடி இரண்டு டீஸ்பூன், உப்பு. தாளிக்க, வதக்க எண்ணெய், மேலே தூவப் பச்சைக்கொத்துமல்லி.
அரைக்கச் சொன்ன வெங்காயம், தக்காளியைத் தனியாக அரைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லியையும் நன்கு விழுதாக அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தை வைத்துக் கொண்டு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை எண்ணெயில் கரையட்டும். இம்மாதிரி மசாலா சேர்த்துச் செய்யப் படும் சமையல்களில் கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தால் மசாலாவின் தாக்கம் குறைவதோடு வயிற்றிலும் வேதனை செய்யாது. சர்க்கரை கரைந்ததும், வெங்காயம் தக்காளி விழுதைப் போட்டு வதக்கவும். நன்கு வதக்கி எண்ணெய் பிரிந்து வருகையில் பச்சைமிளகாய், இஞ்சி விழுதைப் போட்டுச் சிறிது வதக்கவும். பின்னர் உருளைக்கிழங்குகளைச் சேர்த்து மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கொஞ்ச நேரம் வதக்கவும். பின்னர் தக்காளி ப்யூரியை விடவும். ரொம்ப கெட்டியாக இருந்தால் அரைக்கிண்ணம் நீரைச் சேர்க்கவும். தேவையான உப்பைப் போடவும். நன்கு கொதிக்க விடவும். சேர்ந்து கொதித்ததும் கீழே இறக்கும் முன்னர் கரம் மசாலாப் பொடியைப் போட்டுவிட்டுப் பச்சைக் கொத்துமல்லியைத் தூவவும். சூடாக இருக்கையிலேயே வெண்ணெயைச் சேர்க்கவும். அல்லது க்ரீமை மேலே ஊற்றி அலங்கரிக்கவும். உருளைக்கிழங்கில் துளைகள் போடுவதால் கொதிக்கையில் காரம், மசாலா ருசி உள்ளே போய் இறங்கிக் கொள்ளும். ஃபுல்கா ரொட்டி, சப்பாத்தி, பராட்டா போன்றவற்றோடு சாப்பிடலாம். நான் செய்யற அன்னிக்குப் படம் எடுத்துப் போடறேன்.