எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 8, 2018

உணவே மருந்து! கரிசலாங்கண்ணிக்கீரை!

பொதுவாக இந்தக்கீரையைப்பெண்களின் தலை மயிர் வளருவதற்காக எண்ணெய் காய்ச்சவே பயன்படுத்திப் பார்த்திருக்கோம். ஆனால் இதைச் சமைத்தும் சாப்பிடலாம். இதைக் "கையாந்த கரை" என்னும் பெயரிலும் அழைப்பார்கள். இதை வைத்துக் கண் மை,சாந்து போன்றவையும் தயாரிப்பார்கள் எனப் படித்த நினைவு. வட மாநிலங்களில் பிருங்கராஜ் என அழைக்கப்படுவதும் இந்தக் கீரையே! நீலி பிருங்காதித் தைலம் என்னும் தலைக்குத் தேய்க்கும் தைலம் இதை வைத்துத் தயாரிக்கப்படுவதே! மற்ற பிருங்கராஜ் தைலங்களும் கரிசலாங்கண்ணியில் இருந்து எடுக்கப்பட்டவையே.

இதற்குப்பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்கள் சிவப்பு, வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். கீரையின் தரத்தை இதை வைத்துப் பிரிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வெள்ளை நிறக் கரிசலாங்கண்ணி தான் கிடைக்கிறது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உடலுக்குப் பொன்னிறத்தைக் கொடுக்கும். சருமத்தைப் பாதுகாத்துப் பொலிவுடன் விளங்கச் செய்யும் என்கிறார்கள். ஆனால் அது கிடைப்பதில்லை. மஞ்சள் காமாலை நோய்க்குக் கரிசலாங்கண்ணிக்கீரையைச் சாறு எடுத்து மோருடன் சேர்த்துக் குடித்தால் குணம் அடையும். ஆனால் சுத்தமான பசுமோராக இருக்க வேண்டும்.

வாய்க்கசப்பு, வாந்தி, ஜீரணம் ஆகாமை, ஆகியவற்றுக்கு இந்தக்கீரையை உப்பு, மிளகாய், தேங்காய், புளி சேர்த்துத் தேவையானால் பூண்டு வைத்து வதக்கித் துவையல் அரைத்துக் கொடுக்கலாம். அல்லது நெய் விட்டு, வெங்காயம், ஜீரகம், பூண்டு சேர்த்து வதக்கிப் பருப்புப் போட்டுக் கீரையை நன்கு மசித்துக் கொடுக்கலாம்.


படத்துக்கு நன்றி கூகிளார்

Image result for கரிசலாங்கண்ணிக்கீரை!




9 comments:

  1. ஆத்தாடீ... இதுவரை அறியாத செய்தி. நீலி பிருங்காதி தைலம் இந்தக் கீரையிலிருந்தா? தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நான் சமைத்துச் சாப்பிட்டிருக்கேன் நெ.த. சென்னையில் எல்லாக் கீரைகளும் கிடைக்கும். இங்கேயும் காந்தி மார்க்கெட் பக்கம் (திருச்சி) போனால் கிடைக்கலாம். இங்கே தெற்கு கோபுர வாசலில் ஒரு சில கீரைகள் கிடைக்கின்றன. கரிசலாங்கண்ணித் தைலம் அம்மா எனக்காக வீட்டிலேயே காய்ச்சுவார்.

      Delete
  2. இது பெரும்பாலும் கடைகளில் சகஜமாக கிடைப்பதில்லை என்று நினைக்கிறேன். வாங்கியதுமில்லை, சமைத்ததுமில்லை! முன்னர் வீட்டில் நீலிப்ருங்காதித் தைலம் உபயோகித்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. நான் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீலி பிருங்காதித் தைலம் தான். நடுவில் கொஞ்ச நாட்கள் புத்தி கெட்டுப் பதஞ்சலியின் கேஷ் கந்தித் தைலம் தடவிக்கொண்டு கிட்டத்தட்ட வழுக்கையாக மாற இருந்தேன். இப்போ அதைத் தலையைச் சுற்றித் தூக்கி எறிஞ்சுட்டு மறுபடி நீலி பிருங்காதி தான். கொட்டுவதும் குறைஞ்சிருக்கு!

      Delete
    2. அம்பத்தூரில் இருந்தப்போ வாசலில் வரும் கீரைக்காரர்களிடம் சொல்லி வைத்துத் தினம் ஒரு கீரை வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். இப்போல்லாம் கீரை மட்டுமே தான் சமைக்க முடிகிறது. இரண்டு காய்கள் எனில் அதிகம் ஆகி மிஞ்சிப் போய் விடும். இங்கேயும் கீழே காய்கறிக்காரர்கள் வந்தாலும் மேலே வீட்டு வாசல் வரை அனுமதிக்க மாட்டார்கள். நாம் கீழே இறங்கிப் போய்ப் பார்ப்பதற்குள்ளாக வித்துப் போயிடும். அவங்க கிட்டே சொன்னாலும் நாம் வாடிக்கையாக வாங்கினால் தான் கொண்டு வருவாங்க!

      Delete
    3. கீசா மேடம்... இன்றைக்கு உங்க ஊர்ல மழை வரப்போகுது. வரலாற்றில் முதல்முறையா உடனே மறுமொழி வந்துடுத்தே.

      இரவு வெந்தயம் ஊறவைத்து மறுநாள் காலை முதலில் மென்று சாப்பிட்டால் நல்ல எஃபெக்ட்.

      Delete
    4. ஹெஹெஹெ, எங்க ஊரில் இப்போ அக்னி நக்ஷத்திரம் ஆரம்பத்திலிருந்து அநேகமா மழை தான்! இன்னிக்குக் கூட சூரியனார் லீவு போட்டுட்டு அப்புறமா எட்டி எட்டிப் பார்த்துட்டு இருக்கார். :) வெந்தயம், நெல்லிக்காய், ஆவாரம்பூக் கஷாயம், கோதுமை, பார்லி, கறுப்பு ஜீரகம்(ஷாஜீரா) கஷாயம்னு எல்லாத்தையும் குடிச்சுட்டு இருக்கோம். கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, சோளம்னு சாப்பிடறோம்.

      Delete
  3. கரிசலாங்கண்ணி கீரை அவ்வளவாக கிடைப்பதில்லை. நெய்வேலியில் முன்பு கிடைத்தது - அப்போது அம்மா சமைத்துத் தர சாப்பிட்டதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் கரிசலாங்கண்ணிக் கீரை கிடைப்பதில்லை. நீண்ட நாட்கள் கழித்து வ்ருகை!

      Delete