எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, November 11, 2013

பஜ்ஜி சாப்பிட ரெடியா, ரெட்ட ரெடி!

இப்போ பஜ்ஜி,போண்டா பக்கோடா வகைகளைப் பார்ப்போம்.  முதலே பஜ்ஜி. இதுக்குப் பாரம்பரிய முறையில் அரிசி, து.பருப்பு, க.பருப்பு ஊற வைத்து உப்புக் காரம் போட்டு அரைப்பாங்க.  நல்ல நைசா அரைக்கணும்.  உளுத்தம்பருப்பைத் தனியா ஊற வைச்சுக் கொட,கொடனு அரைச்சு முன் சொன்ன மாவை இதில் கலந்து பஜ்ஜி போடுவாங்க. பஜ்ஜி நிறமும், சுவையும், மணமும் மனதை அள்ளும்.  இப்போல்லாம் (குறைந்தது ஐம்பது வருடங்களாகவே) இப்படிப் பண்ணறதில்லை.  என் அம்மாவோட அம்மா மேற்சொன்ன மாதிரி பஜ்ஜி பண்ணிச் சாப்பிட்டிருக்கேன்.  ஆனால் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள் தான் பண்ணுவாங்க.  அதே போல் அடையும்.  எல்லாம் ஊற வைச்சுக் கையாலே அரைச்சுக் கெட்டியாக இருக்கும் அடை மாவைக் கரண்டியாலோ, கையாலோ அடைக்கல்லில் போட்டுட்டு வாழை இலையில் எண்ணெய் தடவி அந்த மாவை அடையாகப்  பரத்துவாங்க.  அதுக்கப்புறம் அந்த அடையில் நான்கைந்து இடங்களில் ஓட்டைபோட்டுக் கரண்டியால் எண்ணெயை விடுவாங்க.  ஒரு அடை மட்டுமே பெரியவங்க சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு ஒரு அடையைப் பகிர்ந்து கொடுப்பாங்க.  அதைத் தொட்டுக் கொண்டு சாதம் சாப்பிடணும். வைகோ சார் இதைக் கேட்டால்  என்ன நினைச்சுப்பார்னு  எனக்கு இப்போத் தோணும்.  ஹிஹிஹிஹி!  இப்போ பஜ்ஜிக்கு வருவோம்.  நாம பண்ணப் போறது ஏற்கெனவே தயார் செய்யப்பட்ட உலர்ந்த மாவில் தான்.  முதலில் மாவுகளில் செய்யும் முறை சொல்றேன்.  அதுக்கப்புறமா இட்லி மாவில் செய்யறதைச் சொல்றேன்.  கடைசியில் உளுந்து அரைச்சுப்போட்டுச் செய்வதையும் பார்த்துடுவோம், என்ன சொல்றீங்க? ரெடியா, நான் ரெடி ரெட்ட ரெடி!


3 comments:

  1. பதிவு பாதியில் நிற்கிறதோ.... நீங்கள் சொல்லும் வகையில் நான் பஜ்ஜி சாப்பிட்டதேயில்லை. அடையும் கூட 'அந்த நாளும் வந்திடாதோ' தான்!

    ReplyDelete
  2. ஓஹோ, பப்ளிஷ் ஆயிடுச்சா? கரன்ட் கட்டாச்சா? சேமிக்கிறதுக்குப் பதில் பப்ளிஷ் அழுத்திட்டேன் போல! :)))))

    ReplyDelete
  3. நானும் பஜ்ஜி சாப்பிட ரெடி.... தோ அடுத்த பதிவுக்கு வந்துட்டே இருக்கேன்! :)

    ReplyDelete